சென்னையில் இரண்டு சக்கர வாகனம் அரசு பேருந்து மீது மோதியதில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை பூந்தமல்லி அருகே சாம் என்ற இளைஞர் ஒரு இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக சாம் சென்ற டூ வீலர் அரசு பேருந்து மீது மோதி விபத்து ஏற்பட்டது. இதில் இளைஞர் சாம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதற்கிடையே, விபத்து ஏற்படுத்திய அரசுப் பேருந்து ஓட்டுநர் தப்பி ஓடிவிட்டார். சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த போலீசார் இளைஞரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி விட்டு, விசாரணை நடத்தி வருகின்றனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…