பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் இலங்கைக்கு இந்தியா ரூ.20 ஆயிரம் கோடிக்கும் மேலான நிதி மற்றும் அத்தியாவசிய பொருட்களின் உதவியை வழங்கியுள்ளது பாராட்டுக்குரியது என சீனா தெரிவித்துள்ளது.
பொருளாதார நெருக்கடி காரணமாக, எரிபொருள் மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், இலங்கைக்கு இந்தியா உதவியதற்காக சீனா பாராட்டு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பேசிய சீன வெளிவிவகார அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ஜாவோ லிஜியன்; பொருளாதார நெருக்கடில் சிக்கித்தவிக்கும் இலங்கை உதவும் இந்தியாவுக்கு பாராட்டுக்கள் என்றும், இந்திய அரசு இலங்கைக்கு நிறைய செய்துள்ளது என தெரிவித்தார். இலங்கை மற்றும் பிற வளரும் நாடுகளுக்கு உதவுவதற்கு இந்தியா மற்றும் பிற சர்வதேச சமூகத்துடன் இணைந்து பணியாற்ற சீனா தயாராக உள்ளதாகவும் அவர் கூறினார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…