Chithambaram Natarajar Temple Issue: கடந்த சில நாள்களாக, சிதம்பரம் நடராஜர் கோயிலில் பல்வேறு வகையான பிரச்சனைகள் எழுந்து வந்ததன் காரணமாக, கோயிலை ஆய்வு செய்வதற்கான பணிகளை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், இந்த ஆய்வுப் பணிக்குத் தீட்சிதர்கள் எதிர்ப்பு தெரிவித்து கோவில் கணக்குகளைத் தர மாட்டோம் என வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இவ்வாறு நேற்று ஆய்வுக்காக சென்றிருந்த நிலையில், எந்த வித கணக்கு வழக்குகளும் சட்டப்படியான கோவில் ஆவணங்களையும் அவர்கள் காட்டவில்லை. கோவிலின் வெளிப்புறத்தையும், கோவிலுக்குச் சொந்தமான கட்டிடங்களை ஆய்வு செய்தனர். ஆனால், கோவிலின் உள்ளே ஆய்வு செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில், இன்றும் ஆய்வு தொடரும் என்றும், ஆய்வு முடிந்த பிறகு அறிக்கை தயார் செய்யப்பட்டு அரசுக்கு அனுப்பப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....!
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…