கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து முதல்வர் ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்துகிறார்.
தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 200க்கும் மேல் உயர்ந்துள்ளது. இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் இன்று கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்த உள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் நடைபெறும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு, மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர். இந்த கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…