கந்துவட்டி கொடுமையால் தமிழகத்தில் பலர் பாதிக்கப்படும் நிலையில், சிலர் குடும்பத்தோடு தற்கொலை செய்யும் நிகழ்வுகள் அவ்வப்போது தமிழகத்தை உலுக்கி வரும் நிலையில், டிஜிபி சைலேந்திர பாபு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இது தொடர்பாக டிஜிபி தனது உத்தரவில், கந்துவட்டி கொடுமையை தடுக்க அனைத்து காவல் ஆணையர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் அதிக வட்டி வசூல் தடை சட்டம் 2003'ன் கீழ் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.
கந்து வட்டி வசூல் செய்பவர்கள் மீது அனைத்து காவல் நிலையங்களிலும் நிலுவையில் உள்ள அனைத்து புகார்களையும் எடுத்து விசாரணை நடத்தி உடனடியாக வழக்கு பதிவு செய்ய அறிவுறுத்தியுள்ளார்.
மேலும் கந்துவட்டிகாரர்களின் இருப்பிடங்களை உடனடியாக சோதித்து வழக்கு தொடர்பாக கிடைக்கக்கூடிய ஆவணங்கள்/பத்திரங்கள் உட்பட அனைத்தையும் பறிமுதல் செய்ய டிஜிபி சைலேந்திரபாபு அறிவுறுத்தியுள்ளார்.
காவல்துறை மேற்கொள்ளும் இந்த சிறப்பு நடவடிக்கைக்கு ஆபரேஷன் கந்துவட்டி என்று பெயரிடப்பட்டுள்ளது. மேலும் இதில் சிறப்பாக செயல்படும் அதிகாரிகள் காவல்துறையால் கௌரவிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…