Sun ,Mar 03, 2024

சென்செக்ஸ் 73,806.15
60.80sensex(0.08%)
நிஃப்டி22,378.40
39.65sensex(0.18%)
USD
81.57
Exclusive

சற்றுமுன் வெளியான தீர்ப்பு :- அதிர்ச்சியில் இபிஎஸ்....குஷியில் ஒபிஎஸ் தரப்பு....!

Bala August 17, 2022 & 14:05 [IST]
சற்றுமுன் வெளியான தீர்ப்பு :- அதிர்ச்சியில்  இபிஎஸ்....குஷியில் ஒபிஎஸ் தரப்பு....!Representative Image.

அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாது என்றும், அதிமுகவில் ஜூன் 23க்கு முன்னர் இருந்த நிலையே நீடிக்க வேண்டும். இருவரும் சேர்ந்தே பொதுக்குழுவை கூட்ட வேண்டும் என  ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகவில்லை என்றும், இடைக்கால பொதுச் செயலாளர் பதவி செல்லாது என்ற எங்களது வாதத்தை நீதிபதி ஏற்றுக் கொண்டார் என ஓ.பி.எஸ் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். 

மேலும், அதிமுக ஒருங்கிணைப்பாளர்‌, இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்து தான்‌ பொதுக் குழுவை கூட்டவேண்டும்‌ என்றும்  நீதிபதி கூறியுள்ளார். இது தொடர்பாக பேசிய ஓ.பன்னீர்செல்வம், அதிமுகவின் கசந்த காலங்கள் இனி வசந்தகாலமாக மாறும் என கருத்து தெரிவித்துள்ளார். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்