வாட்ஸ்அப் குழுக்களில் பகிரப்பட்டு வரும் வேலைவாய்ப்பு செய்தி போலியானவை என மதுரை ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு துறையின் வேலைவாய்ப்பு குறித்த செய்தி தவறானது வாட்ஸ்அப் குழுக்களில் பகிரப்பட்டு வருகிறது. இந்நிலையில், தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு துறையில் வேலைவாய்ப்பு என்ற செய்தி தவறானது என மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஸ் விளக்கம் அளித்துள்ளார். ANIMAL HANDLER cum Driver பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு என்ற வாட்ஸ்அப் செய்தி போலியானது எனவும் தெரிவித்துள்ளார். இதனால் பொதுமக்கள் யாரும் ஏமாற வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…