Fri ,Dec 08, 2023

சென்செக்ஸ் 69,825.60
303.91sensex(0.44%)
நிஃப்டி20,969.40
68.25sensex(0.33%)
USD
81.57
Exclusive

இளம் வயது நடிகர் புற்றுநோயால் மரணம்… திரையுலகினர் அதிர்ச்சி..

Gowthami Subramani October 11, 2022 & 12:40 [IST]
இளம் வயது நடிகர் புற்றுநோயால் மரணம்… திரையுலகினர் அதிர்ச்சி..Representative Image.

ஆஸ்கருக்குச் சென்ற படத்தில் நடித்துள்ள இளம் வயது சிறுவனான ராகுல் கோலி புற்று நோய் காரணமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவின் அதிகாரப்பூர்வ நுழைவாக ஆஸ்கர் விருதுக்குச் சென்ற பிராந்திய திரைப்படமான “செல்லோ ஷோ அல்லது லாஸ்ட் ஃபிலிம் ஷோ” படத்தில் குழந்தை நடிகரான ராகுல் கோலி. இவர் தனது 15 வயதில் புற்றுநோய் பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ளார்.

இவரது தந்தையின் பெயர் ராமு கோஹ்லி. இவர் பிரபல செய்தித்தாளில் பேசுகையில், “கடந்த அக்டோபர் 2 ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை காலை உணவு சாப்பிட்ட பின், ராகுல் தொடர் காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார். பின் மூன்று முறை ரத்த வாந்தி எடுத்தார். எங்கள் குடும்பம் சீரழிந்து விட்டது. ஆனால், அவரது இறுதிச் சடங்குகளைச் செய்த பிறகு, அக்டோபர் 14 ஆம் நாள் ரிலீஸ் ஆகும் அவரது கடைசி படத்தை ஒன்றாகப் பார்ப்போம்” என்று ஆதங்கத்துடன் கூறினார்.

இந்த சிறு வயதிலேயே புற்றுநோய் காரணமாக பரிதாபமாக உயிரிழந்த ராகுல் கோலியின் மரணத்திற்கு திரைப்பிரபலங்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்