Fri ,Dec 08, 2023

சென்செக்ஸ் 69,825.60
303.91sensex(0.44%)
நிஃப்டி20,969.40
68.25sensex(0.33%)
USD
81.57
Exclusive

சைபர் குற்றம் அதிகமுள்ள நாடுகள் பட்டியலில் இந்தியா

Bala May 30, 2022 & 16:01 [IST]
சைபர் குற்றம் அதிகமுள்ள நாடுகள் பட்டியலில் இந்தியாRepresentative Image.

சைபர் தாக்குதலில் இந்தியா 4வது இடம் பிடித்துள்ளதாக எஃப்பிஐ வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் எஃப்பிஐ (FBI )வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, உலகம் முழுவதும் சைபர் கிரைம்களால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கையில் முதல் ஐந்து நாடுகளில் இந்தியாவும் இடம்பெற்றுள்ளது.  இந்தியா முதல் ஐந்து இடங்களில் இருந்தாலும், அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து ஆகியவை உலகம் முழுவதும் சைபர் கிரைமில் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எஃப்பிஐ  அறிக்கையின் படி, 2021 ஆம் ஆண்டில் அமெரிக்காவில் 4,66,501 பேர் சைபர் கிரைம்களால் பாதிக்கப்பட்டுள்ளனர், அதற்கு அடுத்தபடியாக இங்கிலாந்து 3,03,949 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கனடாவில் 5,788 பேரும், இந்தியாவில் 3,131 பேரும் பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 60 வயதிற்கு மேற்பட்டவர்களே சைபர் குற்றங்களால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.

2021 ஆம் ஆண்டில்,அமெரிக்க மக்களிடமிருந்து  847,376 புகார்கள் பதிவாகியுள்ளன, இது 2020 இல் இருந்து 7% அதிகரித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்