நெல்லை அருகே சார்ஜ் ஏற்றுக்கொண்டிருந்த எலெக்ட்ரிக் பைக் திடீரென தீப்பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் கொண்டாநகரம் கிராமத்தை சேர்ந்த டேனியல் ஆசீர் என்பவர் மருத்து விற்பனை பிரதிநிதியாக வேலை பார்த்து வந்துள்ளார். பெட்ரோல் விலை உயர்வு காரணமாக, பட்ஜெட்டில் சென்று வர எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்கியுள்ளார். இந்நிலையில் இன்று காலை தனது வீட்டின் முன்பு நிறுத்தி சார்ஜ் ஏற்றிக்கொண்டிருந்த போது திடீரென தீப்பிடித்து எரியத்தொடங்கியது. இதனால் அதிர்சி அடைந்த அவர், வீட்டில் இருந்து தண்ணீரை கொண்டு தீயை அணைக்க முயற்சி செய்தார். ஆனால் தீ மளமளவென எரியத்தொடங்கியதால், அவர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தார். பின்னர் விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர்.
இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. மேலும் பேட்டரி வாகனம் ஒரு லட்சம் ரூபாய் மதிப்பு கொண்டது. தமிழகத்தில் சில நாட்களாக ஆங்காங்கே பேட்டரி வாகங்கள் தீப்பிடித்து எரிந்து வருவது குறிப்பிடத்தக்கது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…