மேற்கு வங்க மாநிலம் ஜல்பைகுரி மாவட்டத்தில் உள்ள மால் ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் 8 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர் மற்றும் பலர் காணாமல் போயுள்ளனர். துர்கா பூஜையின் முடிவைக் குறிக்கும் சடங்கு முறையில் சிலைகளை நீரில் கரைக்கும் இந்த சம்பவம் நடத்ததாகக் கூறப்படுகிறது.
நேற்று மாலையில் ஆற்றின் கரையில் நூற்றுக்கணக்கான மக்கள் கூடியிருந்த வேளையில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவம் நடந்தபோது எடுக்கப்பட்ட வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
திடீரென்று வெள்ளம் ஏற்பட்டு மக்கள் அடித்துச் செல்லப்பட்டனர். இதுவரை, எட்டு உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. சுமார் 50 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர் என்று ஜல்பைகுரி மாவட்ட ஆட்சியர் மௌமிதா கோதாரா தெரிவித்தார்.
தேடல் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன மற்றும் பேரிடர் மீட்பு படைகள், போலீஸ் மற்றும் உள்ளூர் நிர்வாகத்தின் குழுக்களால் மீட்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று அவர் கூறினார்.
16 பேர் உள்ளூர் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…