2021-22 நிதியாண்டுக்கான வரி தணிக்கை அறிக்கையை தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை அக்டோபர் 7 ஆம் தேதி வரை 7 நாட்களுக்கு நீட்டித்து வருமான வரித்துறை உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையில், "2022-23 மதிப்பீட்டு ஆண்டிற்கான பல்வேறு தணிக்கை அறிக்கைகளை தாக்கல் செய்வதில் வரி செலுத்துவோர் மற்றும் பிற பங்குதாரர்கள் எதிர்கொள்ளும் சிரமங்களைக் கருத்தில் கொண்டு, மத்திய நேரடி வரிகள் வாரியம் (CBDT) பல்வேறு தணிக்கை அறிக்கைகளை தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை நீட்டிக்க முடிவு செய்துள்ளது.
2022-23 மதிப்பீட்டு ஆண்டிற்கு, இது செப்டம்பர் 30, 2022 முதல் அக்டோபர் 7, 2022 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது" என்று நேற்று இரவு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
வருமான வரிச் சட்டத்தின் கீழ், பட்டயக் கணக்காளர் மூலம் தங்கள் கணக்குகளைத் தணிக்கை செய்ய வேண்டிய வரி செலுத்துவோர் செப்டம்பர் 30-ஆம் தேதிக்குள் வரித் தணிக்கைத் துறையிடம் வரித் தணிக்கை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் எனும் நிலையில் தற்போது காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…