தீபாவளி பண்டிகை நாளை கொண்டாடப்படும் நிலையில், நாளை மறுநாள் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுமா எனும் கேள்வி கேள்விக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பதில் அளித்துள்ளார்.
நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில், மக்கள் சொந்த ஊர்களுக்கு படையெடுப்பதால் ரயில் மற்றும் பேருந்து நிலையங்களில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. இந்நிலையில், கூட்ட நெரிசலை குறைக்க சிறப்பு பேருந்துகளும் தமிழக அரசால் இயக்கப்படுகின்றன.
இந்நிலையில் தீபாவளிக்கு அடுத்த நாளான அக்டோபர் 25 ஆம் தேதி மக்கள் ஊர் திரும்பும் வகையில் உள்ளூர் விடுமுறை வழங்க வேண்டும் என்றும் அரசு ஊழியர்கள் மற்றும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கும் விடுமுறை அளிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, தீபாவளிக்கு மறுநாள் 25 ஆம் தேதி பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து புதுச்சேரி அரசு உத்தரவிட்டுள்ளதால், தமிழகத்திலும் பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்படுமா என்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
இதையும் படிங்க : தீபாவளி ஸ்பெஷல்: வெறும் மூன்றே பொருள் சுவையான தேங்காய் லட்டு ரெடி..
இதற்கு பதிலளித்த தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், இது குறித்து கோரிக்கை வந்துள்ளதாகவும், முதல்வரிடம் ஏற்கனவே விஷயத்தை கொண்டு சென்றுள்ளதாகவும், விரைவில் முதல்வர் அறிவிப்பார் என்றும் தெரிவித்தார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…