மெக்சிகோவில் சூறாவளியால் 10 பேர் பலியாகியுள்ளதாகவும், 20 பேர் மாயமாகியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
மெக்சிகோவில் அஹதா எனும் புயல் காரணமாக நேற்றைய தினம் முதல் சூறாவளி காற்றுடன் கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது. இதன் காரணமாக அஹ்சகா மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த சூறாவளி, வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 20 பேர் மாயமாகினர். அவர்களை மீட்கும் பணியில் பேரிடர் மீட்புக்குழுவினர் ஈடுபட்டுத்தப்பட்டுள்ளனர்.
மேலும் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் மீட்பு பணிகள் முழு வீச்சில் நடைபெறுவதாக அந்நாட்டு அரசு தகவல் தெரிவித்துள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…