ஹைதராபாத்தில் பப்பில் பார்ட்டியில் கலந்து கொண்ட சிறுமியை நான்கு பேர் கொண்ட கும்பல் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்சியை ஏற்ப்படுத்தியுள்ளது.
தெலங்கான மாநிலம் ஹைதராபாத்தில் சிறிமி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்சியை ஏற்ப்படுத்தியுள்ளது. மேலும் இந்த சம்பவத்தில் எம்எல்ஏவின் மகனுக்கு தொடர்பு இருப்பதாகவும், குற்றச் செயலில் ஈடுபட்ட அனைத்து குற்றவாளிகளும் சிறார்களே என தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்த சம்பவத்தில் தொடர்புடைய நான்கு பேர் மீதும் IPC பிரிவு 354 மற்றும் POCSO சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.எனினும் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. மேலும் பப் பார்ட்டியில் கலந்து கொண்டவர்களிடமும், அங்கு பணிபுரிபவர்களிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…