தமிழகத்தின் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் தொடக்கக்கல்வி இயக்குநர் சுற்றரிக்கை ஒன்றை அனுப்பியிள்ளார். அதில் 5 வயது பூர்த்தி அடைந்த அனைத்து குழந்தைகளௌயும் அரசுப்பள்ளிகளில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி பள்ளியில் தரமான கல்வி வழங்குவதை உறுதி செய்யும் வகையில் பேனர்கள் வைக்க வேண்டும் என்றும், வீடு வீடாக சென்று பெற்றோர்களிடம் விழிப்புணர்வு ஏற்ப்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மாணவர் சேர்க்கையை கோடை விடுமுறை இறுதியில் பள்ளிகள் திறப்பதற்கு மூன்று நாட்களுக்கு முன்னதாகவே சேர்க்கையை தொடங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைதொடர்ந்து குழந்தைகளுக்கு ஊக்கப்பரிசு வழங்குவதன் மூலம் சேர்க்கையை அதிகப்படுத்தலாம் என்றும் ஒற்றை இலக்கத்தில் மாணவர்கள் உள்ள பள்ளிகளில் ஆசிரியர்கள் அர்ப்பனிப்புடன் பணியாற்றம் வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…