Sat ,Apr 20, 2024

சென்செக்ஸ் 73,088.33
599.34sensex(0.83%)
நிஃப்டி22,147.00
151.15sensex(0.69%)
USD
81.57
Exclusive

நடுரோட்டில் இறங்கி சண்டை போட்ட அழகிரி மகள்.. வைரலாகும் வீடியோ!!

Sekar October 02, 2022 & 15:49 [IST]
நடுரோட்டில் இறங்கி சண்டை போட்ட அழகிரி மகள்.. வைரலாகும் வீடியோ!!Representative Image.

தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ் அழகிரியின் பேரன் மற்றும் மகள் ஐஏஎஸ் அதிகாரியின் மனைவியை ஆபாசமாக திட்டும் வீடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக இருக்கும் கே.எஸ்.அழகிரியின் மகள் பாரதி மற்றும் பேரன் சுபாஷ் ஆகிய இருவரும் சென்னை அசோக் நகரில் 100 அடி சாலையில் காருக்கு வழிவிடுவது தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதத்தின்போது, இந்து சமய அறநிலையத்துறையின் கூடுதல் ஆணையராக இருக்கும் ஐஏஎஸ் அதிகாரி கண்ணனின் மனைவிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. 

இந்த வாக்குவாதம் முற்றி அது மோதலாக மாறிய நிலையில், இருதரப்பும் மாறிமாறி எதிர்தரப்பு மீது போலீசில் புகார் அளித்துள்ளனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

இந்நிலையில், கே.எஸ் அழகிரியின் மகளும், பேரனும் ஐஏஎஸ் அதிகாரியின் மனைவியை தரக்குறைவாக திட்டும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்