சென்னை மணலி புதுநகர் பகுதியில் ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்ததால் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்த பலரும் மன உளைச்சல் காரணமாக தற்கொலை செய்து கொள்வது தொடர்பான செய்திகள் அவ்வப்போது வந்து கொண்டிருக்கின்றன. இதன் காரணமாக கொடிய விஷம் கொண்ட ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்ய வேண்டும் என பல்வேறு தரப்பினரும் தமிழக அரசை வலியுறுத்தி வருகின்றனர்
அந்த வரிசையில் சென்னையில் ஐடி நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வரும் பவானி என்ற பெண்ணுக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளன. பொழுது போக்கிற்காக ரம்மி விளையாடிய இவர், ஒரு கட்டத்தில் 20 சவரன் நகையை விற்றும், சகோதரியிடம் 30 லட்சம் ரூபாயை கடனாக வாங்கியும் ரம்மி விளையாடி வந்துள்ளார். இதில் மொத்த பணத்தையும் இழந்ததால் மன உளைச்சலுக்கு ஆளான பவானி, வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து வந்த காவல்துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…