வெளிநாடுகளில் இருந்து மதுரை திரும்பியவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்று பதிவாகவில்லை. இந்நிலையில் இன்று (ஜூன் 9) விமான நிலையத்தில் நடத்திய கொரோனா பரிசோதனையில் வெளிநாடுகளில் இருந்து மதுரை திரும்பிய 7 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து மருத்துவர்கள் அறிவுரையின் படி இவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்கள் அமெரிக்கா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் இருந்து திரும்பியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…