மகாராஷ்டிர மாநிலம் பால்கர் மாவட்டத்தில் உள்ள விரார் நகரில் நேற்று நடந்த கர்பா நடன நிகழ்ச்சியில் நடனமாடிக்கொண்டிருந்த 35 வயது நபர் ஒருவர் உயிரிழந்த நிலையில், செய்தியை அறிந்த தந்தையும் உயிரை விட்ட சம்பவம் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
கடந்த சனிகிழமை இரவில் மும்பை விராரில் உள்ள குளோபல் சிட்டி வளாகத்தில் நடந்த நவராத்திரி கர்பா நிகழ்வில் நடனமாடியபோது மனிஷ் நாராப்ஜி சோஸ்னிக்ரா என்ற இளைஞர் சரிந்து விழுந்தார்.
அந்த நபரை அவரது தந்தை நாராப்ஜி சோனிக்ரா (66) உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்ட நிலையில், மகன் மரணம் குறித்து கேள்விப்பட்டதும், அந்த நபரின் தந்தையும் சுருண்டு விழுந்து மருத்துவமனையிலேயே உயிரிழந்தார்.
சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த போலீசார் இருவரின் சடலங்களையும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மகன் இறந்த நிலையில், அதை கேட்ட தந்தையும் இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…