புதுக்கோட்டை: இந்த மழைக்காலம் வந்துவிட்டாலே, பள்ளி மாணவர்களும் சரி, கல்லூரி மாணவர்களும் சரி எப்படா லீவு விடுவாங்க என்று ஆர்வத்தோடு எதிர்ப்பார்த்து காத்துகொண்டிருப்பார்கள். அப்படியே மழை பெய்தாலும் பள்ளிக்கு விடுமுறை விடவில்லை என்றால் மாணவர்கள் நொந்துவிடுவார்கள்.
அப்படியொரு சம்பவம் தான் தற்போது நடந்துள்ளது. பள்ளி மாணவர்களுக்கு கடந்த 30 ஆம் தேதி காலாண்டு தேர்வு விடுமுறை விடப்பட்டிருந்தது. ஆனால், தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்ததன் காரணமாக பள்ளிக்கு விடுமுறை விடப்படுமா என்ற சந்தேகம் இருந்துவந்தது. இந்த நிலையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக கனமழை கொட்டி தீர்த்தது.
இதையடுத்து மழையின் காரணமாக மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்திருந்தார். இந்தநிலையில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் திங்கட்கிழமைக்கு விடுமுறை வேண்டும் என்பதால் மாவட்ட ஆட்சியர் கவிதா ராமுக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமையிலிருந்தே விடுமுறை கேட்டு மாணவர்கள் இன்ஸ்டாகிராம் மூலம் கோரிக்கை விடுத்து வந்துள்ளனர்.
மாணவர்கள் மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பிய இன்ஸ்டா மெசேஜை தற்போது மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் சில மாணவர்கள், 'நாளைக்கு மட்டும் லீவு இல்லைன்னா பைத்தியம் ஆயிடும் போல இருக்கு மேடம். படிச்சு படிச்சு பைத்தியம் பிடிக்கிற மாதிரி இருக்கு மேடம். ப்ளீஸ் மேடம் லீவு மட்டும் விடுங்க மேடம்.. உங்களுக்கு என் மனசுல கோயில் கட்டுகிறேன்' என்று கூறியுள்ளனர். மாணவர்களின் இந்த குறும்புத்தனமான மெசேஜ் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…