போராட்டத்தில் ஈடுபட்ட செவிலியர்களை கைது செய்ததற்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அரசு நடத்திய தேர்வில் வெற்றி பெற்றும் தொகுப்பூதியத்தில் பணிபுரியும் 12,000க்கும் மேற்பட்ட செவிலியர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை அருகே 300க்கும் மேற்பட்ட செவிலியர்கள் இன்று (7ம் தேதி) போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை காவலர்கள் கைது செய்தனர்.
இந்நிலையில், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், பணி நிரந்தரம் கோரி, சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனை வளாகத்தில் போராடிய செவிலியர்களை சமூக விரோதிகளைப்போல கைது செய்தது கண்டனத்திற்குரியது. நெருக்கடியான காலத்தில் இன்னுயிரை துச்சமாக நினைத்து பணியாற்றும் செவிலியர்கள் கோரிக்கைகளை அரசு ஏற்க வேண்டும்" என கூறியுள்ளார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…