பானி பூரி சாப்பிட்ட 9 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்ப்படுத்தியுள்ளது.
சத்திஸ்கர் மாநிலம் பிலாஸ்பூர் மாவட்டத்தில் உள்ள தேவகிரிராரி என்ற கிராமத்தில் பானிபூரி வாங்கி சாப்பிட்டவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்ப்பட்டதை அடுத்து அவர்கள் அருகேயுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் மருத்துவமனையில் மினாஸ்கி கோஷ்லே என்ற 9 வயது சிறுமி பலியாகியுள்ளதாகவும், 4 பேர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இன்று உலகம் முழுவதும் உணவு பாதுகாப்பு தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், சுகாதாரமற்ற உணவை சாப்பிட்ட சிறுமி பலியான சம்பவம் சோகத்தை ஏற்ப்படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன் கேரளாவில் இதேபோல் ஷவர்மா சாப்பிட்ட பெண் பலியானது குறிப்பிடத்தக்கது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…