Sun ,Mar 03, 2024

சென்செக்ஸ் 73,806.15
60.80sensex(0.08%)
நிஃப்டி22,378.40
39.65sensex(0.18%)
USD
81.57
Exclusive

31 ஆண்டு போராட்டம்.. ஆனந்த கண்ணீர் வடித்த அற்புதம்மாள்..!!

Sekar May 18, 2022 & 18:41 [IST]
31 ஆண்டு போராட்டம்.. ஆனந்த கண்ணீர் வடித்த அற்புதம்மாள்..!!Representative Image.

நீண்ட காலம் சிறைவாசம் அனுபவித்த பேரறிவாளனை நீதிமன்றம் விடுவித்துள்ளதற்கு, அவரது தாய் அற்புதம்மாள் ஆனந்தக் கண்ணீருடன் இதற்காக உதவிய அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார். 

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சிறைவாசம் அனுபவித்து வந்த பேரறிவாளன், தன்னை விடுதலை செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனு மீது இன்று தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள், பேரறிவாளனை விடுதலை செய்து உத்தரவிட்டனர்.

இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த பேரறிவாளனின் தாய் அற்புதம்மாள், ''நீண்ட நாட்களாக உங்களை புறக்கணித்ததற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். என்ன பேசுவது என்ற தடுமாற்றம் தான் உங்களிடம் பேசுவதிலிருந்து என்னை தடுத்தது.

இன்று பேரறிவாளனை முழுமையாக விடுதலை செய்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. அதனால் நன்றி சொல்ல வேண்டும் என்பதற்காகவே வந்துள்ளேன். 31 ஆண்டுகாலம் ஒரு மனிதனின் வாழ்க்கை சிறையில் கழிந்தது என்பதை உட்கார்ந்து யோசித்தால் அந்த வலி, வேதனை எவ்வளவு ரணம் மிக்கது என்பது புரியும். 

அதை எல்லாம் என் பையன் கடந்து வந்தாச்சு. இந்த அரசு தொடர்ந்து பரோல் கொடுத்ததால் அவனின் உடல்நிலையையும் என்னால் கவனிக்க முடிந்தது. நான் முதல்வர் ஸ்டாலினுக்கு இந்த நேரத்தில் நன்றி தெரிவிக்கிறேன். எனது மகன் விடுதலைக்காக குரல் கொடுத்த அனைவருக்கும் எனது நன்றி'' என ஆனந்த கண்ணீருடன் தெரிவித்தார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்