அடுக்குமாடிக் குடியிருப்பின் 13 ஆவது மாடியில் இருந்து குதித்து பேராசிரியர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி எடமலைப்பட்டிபுதூர் பகுதியில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில், 13 ஆவது மாடியில் வசித்து வருபவர் பிரேம் குமார், சவுமியா தம்பதியினர். சவுமியா என்பவர் திருச்சி தில்லைநகர் பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் வணிகவியல் துறை பேராசிரியராக பணியாற்றி வந்துள்ளார். இவர்களுக்கு ஒரு வயதுடைய ரியா மற்றும் 6 வயதான சிவியா என இரு மகள்கள் உள்ளனர்.
பிரேம்குமார் பல்வேறு வியாபாரங்களில் தன்னை ஈடுபடுத்தி வந்து கொண்டிருக்கிறார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு சவுமியா மாடியில் இருந்து கீழே விழுந்து இறந்துள்ளார்.
இதனைக் கண்ட குடியிருப்புவாசி அதிர்ச்சி அடைந்து, உடனே அந்தப் பகுதி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு ரத்த வெள்ளத்தில் கிடந்த சவுமியாவின் உடலைக் கைப்பற்றி போலீசார் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இது குறித்து விசாரித்த போது, முதல்கட்ட விசாரணையில் சவுமியா நேற்று முன்தினம் இரவு 8 மணிக்கு மேல் வீட்டில் இருந்து துணி காய போடுவதற்காக வெளியே வந்துள்ளார். அதன் பின்னரே, இவர் மாடியில் இருந்து கீழே விழுந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இதில் அவர் துணிகளை காயவைக்கும் போது நிலை தடுமாறி கீழே விழுந்தாரா? அல்லது குடும்பத்தகராறு அல்லது வேறு சில காரணத்தினால் தற்கொலை செய்து கொண்டாரா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
அடுக்குமாடிக் குடியிருப்பின் 13 ஆவது மாடியில் இருந்து விழுந்து இறந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…