பப்ஜி மதன் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்யப் போவதாக நீதிமன்றம் தெரிவித்ததையடுத்து, ஜாமின் மனு வாபஸ் பெறப்பட்டுள்ளது.
பப்ஜி விளையாட்டு மூலம் ஆபாசமாக பேசி வீடியோக்களை பதிவேற்றி பண மோசடி செய்த வழக்கில் பப்ஜி மதன் என்கிற மதன் கைது செய்யப்பட்டார். இதையடுத்து, சென்னை மாநகர காவல் ஆணையர் உத்தரவின் பேரில், பப்ஜி மதன் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில், தன்னுடன் விளையாடியவர்களிடம் மட்டுமே உரையாடியதாகவும், 316 நாட்களாக சிறையில் உள்ளதால் ஜாமின் வழங்க வேண்டும் என பப்ஜி மதன் கோரிக்கை விடுத்திருந்தார். இந்நிலையில், ஆன்லைன் விளையாட்டை பயன்படுத்தி சிறுவர்களிடம் தவறாக பேசியது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதால் ஜாமின் வழங்க முடியாது என நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…