தமிழகத்தில் புதிய கல்வியாண்டு தொடங்கும்போது பள்ளிக்கு வரும் மாணவர்கள் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, நேற்று வெளிநாட்டில் இருந்து சென்னை வந்துள்ள பயணிகளை, சென்னை சர்வதேச விமான நிலையத்தில் குரங்கு அம்மை நோய்த்தடுப்பு நடவடிக்கைகளுக்கு உட்படுத்துவதை ஆய்வு செய்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது சென்னை, மதுரை, கோவை, திருச்சி ஆகிய பன்னாட்டு விமான நிலையங்களில் இதுவரை நடத்தப்பட்ட சோதனையில், யாருக்கும் குரங்கு அம்மை பாதிப்பும் கண்டறியப்படவில்லை எனத் தெரிவித்தார்.
மேலும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில், பள்ளிகள் திறக்கப்படும் போது மாணவர்கள் மாஸ்க் அணிய வேண்டும் என்றும் இது தொடர்பாக விரைவில் உரிய அறிவுறுத்தல் வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…