சின்னத்திரை நடிகர் அர்ணவ் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த 2 வாரங்களாக சின்னத்திரை வட்டாரத்தில் சின்னத்திரை ஜோடியான அர்ணவ்-திவ்யா ஸ்ரீதர் ஜோடியின் குடும்ப சண்டை பேசுபொருளாக இருந்து வந்தது. இருவரும் மாறிமாறி குற்றம் சாட்டிக்கொண்ட நிலையில், இரு தரப்பிலும் போலீசில் புகார் அளிக்கபப்ட்டது.
இந்நிலையில் போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். மேலும் நடிகர் அர்ணவை விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியிருந்தனர்.
ஆனால் அர்ணவ் நேரில் ஆஜராகாமல் தொடர்ந்து பல்வேறு காரணங்களை கூறி வந்த நிலையில், தற்போது நேமம் என்ற இடத்தில் படப்பிடிப்பில் இருந்த அர்ணவை, போலீசார் நேரில் சென்று கைது செய்து அழைத்து சென்றுள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…