டெல்லி மற்றும் அதன் அண்டை மாநிலங்களான பஞ்சாப், ஹரியானா மற்றும் உத்தரபிரதேசத்தில் கடுமையான வெப்ப அலை வீசக்கூடும் என்பதால் இந்தியா வானிலை ஆய்வு மையம் ‘ஆரஞ்சு அலர்ட்’ விடுத்துள்ளது.
டெல்லியில் ஆரஞ்சு எச்சரிக்கை. ஹரியானா, பஞ்சாப், டெல்லி, உ.பி மற்றும் மத்தியப் பிரதேசம், ராஜஸ்தானின் சில பகுதிகளில் கடந்த சில நாட்களாக கடுமையான வெப்ப அலைகள் வீசி வருகிறது. இந்நிலையில் அடுத்த 4 நாட்களுக்கு வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்றும், 44 - 47 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவாகலாம் என்பதால் வெளியே செல்லும்போது மக்கள் கவனமாக இருக்குமாறு அறிவுறுத்துகிறோம் என இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
டெல்லியில் கடந்த இரண்டு நாட்களாக கடும் வெப்பம் நிலவி வருகிறது. ஞாயிற்றுக்கிழமை, தலைநகரில் அதிகபட்ச வெப்பநிலை 44.8 டிகிரிக்கு மேல் பதிவாகியுள்ளது. முங்கேஷ்பூர், 47.3 டிகிரி செல்சியஸ் பதிவானது, அக்ஷர்தாமில் உள்ள விளையாட்டு வளாகம் 46.6 டிகிரி செல்சியஸ், நஜப்கர் 46.3 டிகிரி செல்சியஸ், பிடம்புரா 46.2 டிகிரி செல்சியஸ், ரிட்ஜ் 45.7 டிகிரி செல்சியஸ் மற்றும் ஜஃபர்பூர் (45.1 டிகிரி செல்சியஸ்) வெப்பம் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…