மும்பை வெர்சோவா இந்து மயானத்தில் கிருஷ்ணகுமார் குன்னத் உடல் நலடக்கம் செய்யப்பட்டது.
இந்தியத் திரையுலகின் பிரபல பாடகரான கேகே என அழைக்கப்படும் கிருஷ்ணகுமார் குன்னத், நேற்றிரவு (மே 31) கொல்கத்தாவில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பின்பு, அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதால் மரணமடைந்தார். இவருக்கு வயது 53. இந்தி, தெலுங்கு, தமிழ் என பல மொழிகளில் பாடியுள்ளார். ’மின்சார கனவு’ படத்தில் ‘ஸ்ட்ராபெர்ரி கண்ணே...’ பாடல் மூலம் தமிழில் அறிமுகமானவர் இவர்.
இதனையடுத்து அவரது உடல் மும்பைக்கு கொண்டு வரப்பட்டது. இறுதிச் சடங்குகள் செய்யப்பட்ட பின் இன்று பிற்பகல் வெர்சோவா இந்து மயானத்தில் நலடக்கம் செய்யப்பட்டது. திரையுலகம் மற்றும் இசைத்துறை சகாக்கள் இறுதிச் சடங்கிற்கு வந்து பாடகருக்கு இறுதி அஞ்சலி செலுத்தி வந்தனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…