Thu ,Apr 25, 2024

சென்செக்ஸ் 73,852.94
114.49sensex(0.16%)
நிஃப்டி22,402.40
34.40sensex(0.15%)
USD
81.57
Exclusive

சிவகாசியில் அடுத்த அதிர்ச்சி... தூக்கிட்டு கொண்ட பள்ளி மாணவி

Bala July 27, 2022 & 08:50 [IST]
சிவகாசியில் அடுத்த அதிர்ச்சி... தூக்கிட்டு கொண்ட பள்ளி மாணவிRepresentative Image.

சிவகாசியில் பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்சியையும் சோகத்தையும் ஏற்ப்படுத்தியுள்ளது. 

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தற்கொலை செய்து கொள்ளும் மாணவிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கள்ள்க்குறிச்சியில் மாணவி தற்கொலை செய்து கொண்டதையடுத்து அப்பகுதியே கலவர பூமியாக மாறியது பெரும் பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது. அதனையடுத்து திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரு பள்ளி மாணவி, அடுத்ததாக கடலூர் மாவட்டத்தில் பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்டது பெரும் அதிர்சியையும் சோகத்தையும் ஏற்ப்படுத்தியது.

இந்நிலையில் அந்த அதிர்சியே இன்னும் தாங்கமுடியாத நிலையில் விருதுநகர் மாவட்டம் சிவகாசி ரிசர்வ்லைன் அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்து வந்த மாணவி ஒருவர், வீட்டில் யாரும் இல்லா நேரம் பார்த்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் மாரனேரி காவல்நிலையத்தில் புகாரளித்தனர். இதுக்குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், பள்ளி சிறுமியின் தற்கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்து விசாரித்து வருகின்றனர். இதனால் அப்பகுதிகளில் பரபரப்பு நிலவி வருகிறது.

குறிப்பு:- தற்கொலை எதற்கும் தீர்வல்ல, மன அழுத்தம்... எதுவாக இருந்தாலும் அதைச் சரிசெய்வதற்கு உதவ 24 மணி நேரமும் தயார்நிலையில் இருக்கிறது 104. அழையுங்கள்...  பிரச்னையைத் தீருங்கள்
 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்