நம் ஊரில் மட்டுமல்ல உலகத்தில் எந்த மூலைக்கு சென்றாலும் மாணவர்களுக்கு எக்ஸாம் என்றாலே பிடிக்காது தான். ஆனா எப்படியோ பாஸ் ஆகணுமே, இல்லாட்டி வீட்ல மொத்து வாங்கணுமே என்று பல தில்லாலங்கடி வேலைகள் செய்வார்கள். ஆனால் இங்க பாருங்க ஒருத்தர் கலை நயத்தின் உச்சத்துக்கு போயிட்டாரு. ஸ்பெயின் நாட்டில் சட்டக்கல்லூரி மாணவர் ஒருவர், எக்ஸாம்-க்கு 11 பேனாக்களில் சிறிதாக பிட் எழுதி கொண்டு போயிருக்கிறார். அதை எப்படியோ கண்டுபிடித்த கண்காணிப்பாளர் அதனை கைப்பற்றினார்.
பின்னர் சமீபத்தில் தன்னுடைய அறையை சுத்தம் செய்து கொண்டிருக்கும் போது அந்த பேனாக்கள் அவருக்கு தென்பட்டது. அதை அவர் போட்டோ எடுத்து சோசியல் மீடியாவில் பதிவிட்டுள்ளார் " பல வருடங்களுக்கு முன்பு ஒரு மாணவன் பிட் எடுத்து வந்து மாட்டிக்கொண்டார். அவரின் கலைநயம் என்னை பிரம்மிக்க வைத்தது" என்று பதிவிட்டுள்ளார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…