Sun ,Dec 10, 2023

சென்செக்ஸ் 69,825.60
303.91sensex(0.44%)
நிஃப்டி20,969.40
68.25sensex(0.33%)
USD
81.57
Exclusive

மாணவர்களுக்கு மாதம் ரூ.1,500.. தமிழக அரசின் புதிய அப்டேட்!!

Sekar October 07, 2022 & 11:31 [IST]
மாணவர்களுக்கு மாதம் ரூ.1,500.. தமிழக அரசின் புதிய அப்டேட்!!Representative Image.

மாணவர்களின் தமிழ் இலக்கிய திறனை மேம்படுத்தும் வகையில், 1,500 மாணவர்களுக்கு மாதம் ரூ.1,500 வழங்கும் திட்டத்திற்கான எழுத்துத் தேர்வுக்கு இன்று முதல் ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள அனைத்து வகை பள்ளிகளிலும் 11 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு தமிழ் இலக்கிய திறனை மேம்படுத்தும் வகையில், அவர்களுக்கு தேர்வு நடத்தப்பட்டு சிறந்த மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு மாதம் ரூ.1,500 ஊக்கத்தொகை வழங்கப்படும் என தமிழக அரசு சட்டசபையில் அறிவித்திருந்தது. அதை நடப்பு கல்வி ஆண்டிலேயே செயல்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.

இதன்படி தமிழ் இலக்கிய திறனறிதல் தேர்வுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்ட நிலையில், 2,60,000 மாணவர்கள்  இதற்கு விண்ணப்பித்துள்ளனர். இதற்கான தேர்வு, வரும் 15ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில் இன்று முதல் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

100 மதிப்பெண்களுக்கு நடைபெறக்கூடிய தேர்வில் இருந்து, மதிப்பெண் அடிப்படையில் அரசு பள்ளி மற்றும் தனியார் பள்ளிகளில் தலா 750 மாணவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வு எழுத உள்ள நிலையில், இதிலிருந்து டாப் 1,500 மாணவர்கள் மட்டும் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு மாதம் ரூ.1,500 ஊக்கத்தொகை 24 மாதங்களுக்கு வழங்கப்பட உள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்