Thu ,Mar 28, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

பள்ளிகளுக்கு முதல்வர் அறிவிப்பு… இனி கவலை இல்லை மாணவர்களே…!

Gowthami Subramani October 19, 2022 & 13:45 [IST]
பள்ளிகளுக்கு முதல்வர் அறிவிப்பு… இனி கவலை இல்லை மாணவர்களே…!Representative Image.

தமிழகத்தில் புதிதாக வகுப்பறைகள் கட்டப்படும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சட்டசபைக் கூட்டத்தொடரில் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் மழைக்கால சட்டசபைக் கூட்டத்தொடர் கடந்த அக்டோபர் 17 ஆம் நாள் தொடங்கி தொடர்ந்து மூன்று நாள்கள் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டது. அதன் படி, மூன்றாவது நாளான இன்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.

அதன் படி, பள்ளி மாணவ, மாணவிகளுக்கு புதிதாக வகுப்பறைகள் கட்டித் தரப்படும் எனத் தெரிவித்துள்ளார். இதில் அவர் குறிப்பிட்டதாவது, நமது அரசுப் பள்ளிகள் தரமான கல்வியை வழங்கி வருவதால் கடந்த 2 ஆண்டுகள் சுமார் 15 லட்சம் மாணவர்கள் அரசுப் பள்ளிகளில் கூடுதலாக சேர்ந்துள்ளனர்.

இது குறித்து மேலும் கூறிய அவர், கடந்த ஓராண்டு காலத்தில் பல்வேறு புதிய திட்டங்கள் பள்ளிக் கல்வித்துறையில் முன்னெடுத்து வருகிறது. இந்திய ஒன்றியத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் எடுத்துக்காட்டாக விளங்குமாறு அமைவது இல்லம் தேடி கல்வி, மாதிரிப் பள்ளிகள், எண்ணும் எழுத்தும் திட்டம், காலை உணவு திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில், பள்ளிக் கட்டமைப்பு வசதிகளையும் வலுப்படுத்துவதற்கு அரசுப் பள்ளிகளில் புதிய வகுப்பறைகள் கட்டுவதற்கான திட்டம் அறிவிக்கப்பட்டது. இதில், சுமார் 26,000 புதிய வகுப்பறைகளும், 7,500 கிமீ.சுற்று சுவரும், பராமரிப்பு பணிகளுக்கு சுமார் 2,500 கோடி நிதி என மொத்தம் ரூ.12,300 கோடி தேவை எனக் கண்டறியப்பட்டது. இவற்றை படிப்படியாக பெறுவதற்கு பேராசிரியர் அன்பழகன் மேம்பாட்டுத் திட்டம் என அறிவிக்கப்பட்டது. இத்திட்டத்தின் படி, நடப்பாண்டில் சுமார் ரூ.1,430 கோடி ஒதுக்கப்பட்டு அதற்கான வேலைகள் நடைபெற்று வருகிறது.

இதன் அடிப்படையில், ஊராட்சி ஒன்றிய தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகளுக்கு ரூ.800 கோடி மதிப்பீட்டில் 6,000 புதிய வகுப்பறைகள் கட்டப்படும் எனக் கூறியுள்ளார். உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளுக்கு ரூ.250 கோடி மதிப்பீட்டில் சுமார் 1,200 வகுப்பறைகள் கட்டப்படும் எனவும் கூறியுள்ளார். இந்த இரண்டும் சேர்த்து மொத்தம் ரூ.1050 கோடி மதிப்பீட்டில், மொத்தமாக 7,200 வகுப்பறைகள் நடப்பாண்டில் கூடுதலாகக் கட்டப்படும்.

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்