கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மார்த்தாண்டம் அருகே, அரசு பேருந்தில் இருக்கை ஒன்று கழன்று விழுந்து, பயணி ஒருவர் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் இயங்கும் ஒரு சில அரசு பேருந்துகள் மிகவும் மோசமான நிலையில் இருக்கின்றன. கடந்த சில நாள்களுக்கு முன்பு, அரசு பேருந்தின் படிகட்டு உடைந்து பயணி ஒருவர் பலத்த காயம் அடைந்தார். அதே போல, மழை காலங்களில் பேருந்துக்குள் நீர் வடியும் நிலைகள் அரங்கேறி வருகின்றன. இந்த நிலையில், பேருந்துக்குள் உள்ள இருக்கை ஒன்று கழன்று பயணி ஒருவர் தூக்கி வீசப்பட்ட சம்பவம் கன்னியாக்குமரி மாவட்டத்தில் நடந்துள்ளது.
மார்த்தாண்டத்தில் இருந்து, கேரளா செல்வதற்காக பளுகல் பகுதிக்கு 84ஏ என்ற தமிழக அரசுப் பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது, அந்த பேருந்தில் உள்ள இருக்கை ஒன்று கழன்று விழுந்தது. இதனால், அந்த இருக்கையில் இருந்த பயணியான தஞ்சாவூரைச் சேர்ந்த செல்வராஜ் என்பவர் கீழே விழுந்துள்ளார். இதில் அவர் தலை மற்றும் கைகளில் பலத்த காயம் அடைந்தார். இவரை பயணிகள், அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…