தமிழக அரசு பால் விலையை உயர்த்தி நிர்ணயித்துள்ளது இல்லத்தரசிகளுக்கிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பால் கூட்டுறவு அமைப்புகளின் முக்கிய நோக்கமாக இருப்பது பால் உற்பத்தியாளர்களுக்கு நியாயமான கொள்முதல் விலையையும், பால் நுகர்வோர்களுக்கு தரமான பாலை, குறிப்பிடப்பட்ட நியாயமான உறையில் விற்பனை செய்வது ஆகும். இந்த சூநிலையில், உற்பத்தி செலவினம் மற்றும் இடுபொருள்களின் விலையேற்றம் உள்ளிட்டவற்றைக் கருத்தில் கொண்டு பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் என பால் உற்பத்தியாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
அதன் படி, இவர்களது கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், பசும்பால் கொள்முதல் விலையை லிட்டர் ஒன்றுக்கு ரூபாய் 3 மூன்று உயர்த்தியுள்ளது. அதன் படி, பசும்பால் ரூ. 32 லிருந்து ரூ.35 ஆக உள்ளது. மேலும், எருமைப்பாலின் விலையும் ரூ.3 உயர்த்தப்பட்டு 41 ரூபாயிலிருந்து,44 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இது வரும் நவம்பர் 5 ஆம் தேதியில் இருந்து வழங்கப்படும் என கூறப்படுகிறது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…