தீபாவளி பண்டிகைக்காக வரும் அக்டோபர் 21 ஆம் தேதி முதல் 7 நாட்கள் சிறப்பு காட்சிகளை திரையிட திரையரங்குகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அக்டோபர் 24 ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடும் நிலையில், 21 ஆம் தேதி பிரின்ஸ் மற்றும் சர்தார் படங்கள் திரைக்கு வர உள்ளன.
இந்நிலையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு காட்சிகளை நடத்த அனுமதி கோரி தமிழக திரையரங்க உரிமையாளர் சங்க நிர்வாகி பன்னீர் செல்வம் அரசுக்கு கடிதம் எழுதியிருந்தார்.
இதையடுத்து, வரும் 21ம் தேதி முதல் 27ம் தேதி வரை 7 நாட்கள் சிறப்பு காட்சிகளை திரையிட்டுக் கொள்ள அனுமதி வழங்கி தமிழக அரசு திரையரங்குகளுக்கு உத்தரவிட்டுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…