ரேஷன் கடைகளில் கைரேகை பதிவுகள் சரியாக செயல்படவில்லை எனக் குற்றம் சாட்டப்பட்டு வந்த நிலையில், கருவிழி பதிவு மூலம் ரேஷன் பொருட்கள் வாங்கும் திட்டத்தை தமிழக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி இன்று தொடங்கி வைத்தார்.
கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் ரேஷன் கடைகளில் கைரேகை பதிவுகள் குறித்து குற்றச்சாட்டுகள் தொடர்ந்து அதிகரித்து வந்தது. இதனால் முதியவர்கள் ரேஷன் கடைகளில் அரிசி மற்றும் சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வாங்குவதில் ஏற்பட்டது.
இந்நிலையில், தமிழகத்தில் ரேஷன் கடைகளில் கருவிழி அடையாள முறை மூலம் பொருட்கள் விநியோகம் செய்யும் நடைமுறை முதற்கட்டமாக திருவல்லிக்கேணியில் தொடங்கப்பட்டுள்ளது. அமைச்சர் சக்கரபாணி தொடங்கி வைத்தார்.
பின்னர் பேசிய அமைச்சர் சக்கரபாணி, இத்தகைய நடைமுறை மகாராஷ்டிரம், அசாம், தெலுங்கானா போன்ற மாநிலங்களில் ஏற்கனவே செயல்பாட்டில் இருப்பதாகவும் தெரிவித்ததோடு, விரைவில் தமிழகத்தின் அனைத்து பகுதிகளுக்கும் இந்த திட்டம் விரிவாக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…