வயிற்று வலி தீர சென்ற சிறுமியை மூன்று மாதம் கார்ப்பமாக்கிய பூசாரியை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த தம்பதி ஒருவரின் 15 வயது மகள் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். பெற்றோர்களும் பாட்டி வைத்தியம் முதல் ஆங்கில மருத்துவம வரை அனைத்தையிம் முயற்சி செய்தும் எந்த பலனும் கிடைக்கவில்லை. இதனையடுத்து அக்கம்பக்கத்தின் அறிவு ஜீவன்கள், கீரனூர் அருகே மணிப்பிள்ளை கிராமத்தில் உள்ள பழனி என்ற பூசாரியிடம் சென்றால் சிறுமியின் வயிற்று வலி பஞ்சாக பரந்து விடும் என வசனங்களை அள்ளி விட்டுள்ளனர்.
இதனை நம்பி அந்த பெற்றோர்களும், பூசாரி பழனியிடம் சென்று சிறுமியின் உடல்நல பிரச்சனையை கூறி அழதுள்ளனர். இதனையடுத்து சிறுமி உடல் மீது காத்து, கருப்பு இருப்பதாகவும், அதனை போக்க பூஜை நடத்த வேண்டும் அதுவும் சிறுமி மட்டும் என்னுடன் தனியாக வரவேண்டும் எனக் கூறியுள்ளார். சிறுமியின் மீதுள்ள அன்பால், உடல்நல பிரச்சனை தீரும் என்ற நம்பிக்கையில் அவர்கள் சம்மதித்துள்ளனர்.
சிறுமியுடன் தனியாக அறைக்கு சென்ற பூசாரி பழனி சிறுமியிடம் தனது திருவிளையாடலை காட்டியுள்ளார். மேலும் இதனை உன் பெற்றோரிடம் கூறினாள் தெய்வம் கூத்தமாகி உன் குடும்பமே அழிந்து விடும் என அருள் வாக்கு கூறியுள்ளார். பயன் காரணமாக பூசாரியின் திருவிளையாடலை தாயிடம் கூட சிறுமி மறைத்துள்ளார். ஆனால் சிறுமியின் போக்கில் மாற்றம் ஏற்ப்பட்டதால் சந்தேகமடைந்த சிறுமியின் தாய், ஜோம்ஸ் பாண்ட் ஸ்டைலில் விசாரணையை தொடங்கினாள், இதில் பூசாரி தன்னை பாலியல் பலத்காரம் செய்ததாக சிறுமி கூறியதை கேட்டு அதிர்சியடைந்த தாய், அருகில் உள்ள மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் விசாரணையை தொடங்கிய போலீசார் பூசாரி பழனியை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். இது தொடர்பாக பேசிய காவல்துறையினர், பூசாரி பழனி எப்படி எத்தனை பெண்களிடம் திருவிளையாடலை செய்துள்ளார் என விசாரித்து வருவதாக தெரிவித்துள்ளனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…