கேரள அரசு திருவனந்தபுரம் அருகே வசிக்கும் இரண்டு குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கை ஏற்படுத்தும் ரோட்டா வைரஸைப் போன்ற நோரோ வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் தெரிவித்துள்ளது.இந்த வைரஸ் அசுத்தமான நீர் மற்றும் கெட்ட உணவுகள் மூலம் பரவுவதால், சுகாதாரத் துறை அலெர்ட் செய்யப்பட்டு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
"இரண்டு குழந்தைகளுக்கு நோரோ வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது, அவர்களின் உடல்நிலை சீராக உள்ளது. தற்போது கவலைப்படத் தேவையில்லை, ஆனால் மக்கள் கவனமாக இருக்க வேண்டும் மற்றும் தூய்மையைப் பராமரிக்க வேண்டும்" என்று கேரள மாநில சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார். பள்ளியில் மாணவர்கள் மதிய உணவை சாப்பிட்ட பிறகு உணவு விஷம் ஏற்பட்டதாக அதிகாரிகள் கருதுகின்றனர்.
நோரோ வைரஸ் என்றால் என்ன?
நோரோவைரஸ் என்பது கொரோனா போன்ற ஒரு தொற்று நோயாகும், இது வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தியை ஏற்படுத்துகிறது.
நோரோவைரஸ் பாதிப்பு:-
பாதிக்கப்பட்ட நபருடன் நேரடியாகத் தொடர்புகொள்வது, அசுத்தமான உணவு அல்லது தண்ணீரைக் குடிப்பது அல்லது கழுவாத கைகளை உங்கள் வாயில் வைப்பது ஆகியவை நோரோவைரஸ் பரவும் வழிகள்.
நோரோவைரஸ் அறிகுறிகள்:-
வயிற்றுப்போக்கு, வாந்தி, குமட்டல் மற்றும் வயிற்று அசௌகரியம் ஆகியவை நோரோவைரஸின் பொதுவான அறிகுறிகளாகும். காய்ச்சல், தலைவலி மற்றும் உடல்வலி ஆகியவை பக்க விளைவுகளாக இருக்கலாம்.
நோரோ வைரஸ் எவ்வாறு தடுப்பது..?
கைகளை அடிக்கடி கழுவுதல், பழங்கள் மற்றும் காய்கறிகளை கழுவிய பின் பயன்படுத்துதல், மீன்களை நன்கு சமைத்தல், நோய்வாய்ப்பட்டால் வீட்டிலேயே இருத்தல் ஆகியவைகள் மூலம் பரவாமல் தடுக்க முடியுமாம்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…