Fri ,Dec 08, 2023

சென்செக்ஸ் 69,825.60
303.91sensex(0.44%)
நிஃப்டி20,969.40
68.25sensex(0.33%)
USD
81.57
Exclusive

பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி மாற்றம்...!

Bala June 16, 2022 & 12:45 [IST]
பொதுத்தேர்வு  முடிவுகள் வெளியாகும் தேதி மாற்றம்...!Representative Image.

10 மற்றும் 12ம்  வகுப்பு பொதுத்தேர்வு  முடிவுகள் வரும் 20ம் தேதி வெளியாகும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. 10ஆம் வகுப்பு முடிவுகள் நாளையும், +2 தேர்வு முடிவுகள் 23ஆம் தேதியும் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில்,  தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

மே-2022-ல் நடைபெற்ற 2021-2022-ஆம் கல்வியாண்டிற்கான மேல்நிலை இரண்டாமாண்டு (+2) மற்றும் பத்தாம் வகுப்பு-S.S.L.C பொதுத்தேர்வு முடிவுகள்  பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களால் 20.06.2022 (திங்கட்கிழமை) அன்று அண்ணா நூற்றாண்டு நூலகக் கூட்டரங்கில் வெளியிடப்படப்படவுள்ளது. தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் நேரம் மற்றும் மாணவர்கள் தங்கள் தேர்வு முடிவுகளை, www.tnresults.nic.in www.dgettn.nic.in www.dge2.tn.nic.in www.dge.tn.gov.in இணையதளங்களில் தெரிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கும் தேசிய தகவலியல் மையங்களிலும் (National Informatics Centres) அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும் கட்டணமின்றி தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும் மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது. 


 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்