Sat ,Dec 02, 2023

சென்செக்ஸ் 67,481.19
492.75sensex(0.74%)
நிஃப்டி20,267.90
134.75sensex(0.67%)
USD
81.57
Exclusive

நாளை முதல்.. பள்ளி மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!!

Sekar October 09, 2022 & 15:45 [IST]
நாளை முதல்.. பள்ளி மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!!Representative Image.

தமிழகத்தில் 6 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இன்றுடன் காலாண்டு விடுமுறை முடிந்து நாளை பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த செப்டம்பர் மாத கடைசியில் தமிழகத்தில் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு நடத்தப்பட்ட நிலையில்,அக்டோபர் 1 முதல் 5 ஆம் தேதி 6 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் அக்டோபர் 1 முதல் 9 ஆம் தேதி வரை 1 முதல் 5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது.

எனினும் பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் கோரிக்கையை ஏற்ற தமிழக பள்ளிக்கல்வித்துறை இந்த விடுமுறையை 6 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 9 ஆம் தேதி வரையும், 1 முதல் 5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 12 ஆம் தேதி வரையும் நீடித்தது.

இந்நிலையில், 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு இன்றோடு காலாண்டு தேர்வு முடிந்து நாளை முதல் பள்ளிகள் திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் 13 ஆம் தேதி மீண்டும் பள்ளிக்கு திரும்புவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்