சென்னை கேயம்பேடு சந்தையில் ஒரு கிலோ தக்காளி விலை ரூபாய் 40க்கு விற்பனையாவதல் இல்லத்தரசிகள் நிம்மதியடைந்துள்ளனர்.
கடந்த சில வாரங்களாக தக்காளி விலை உச்சத்தை தொட்ட நிலையில் தற்போது விலை குறைந்துள்ளது. வெளிமாநிலங்களில் இருந்து வரத்து அதிகரிப்பால் தக்காளி விலை கட்டுக்குள் வந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். அதாவது வெளிமாநிலங்களில் பெய்த மழை காரணமாக அங்கு விளைச்சல் பாதிக்கப்பட்டதால் தமிழத்திற்கு 400 டன் தக்காளி மட்டுமே வந்ததாகவும், ஆனால் தற்போது 800 டன் வரை தக்காளி வந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
அந்த வகையில் தக்காளி விலை இன்று ரூபாய் 20 வரை குறைந்து முதல் ரக தக்காளி விலை ரூபாய் 40க்கும் இரண்டாம் ரக தக்காளி ரூபாய் 30க்கும் விற்பனை செய்யப்படுவதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…