சேப்பாக்கம் திமுக எம்.எல்.ஏ வான உதயநிதி ஸ்டாலின் தன்னை யாரும் மூன்றாம் கலைஞரே என்று அழைக்க வேண்டாம் என உடன்பிறப்புகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக சார்பில் சேப்பாக்கம் தொகுதியில் களமிறங்கி வெற்றி பெற்றார் உதயநிதி ஸ்டாலின். இந்நிலையில் அவருக்கு அமைச்சர், துணை முதல்வர், மேயர் பதவி வழங்க வேண்டும் என உடன்பிறப்புகள் அவ்வப்போது தலைமைக்கு வேண்டுகோள் விடுத்து வந்தனர். மேலும் திமுக கூட்டங்கள் எங்கு நடந்தாலும் அங்கு உதயநிதி ஸ்டாலின் புகைப்படம் வைக்கப்பட்டு வந்தது. முக்கியமாக திமுக கூட்டங்களில் வைக்கப்படும் பேனர்களில் மூன்றாம் கலைஞரே நான்காம் அண்ணாவே என்ர வசங்கனங்கல் இடம்பெற்றது.
இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின் தன்னை யாரும் மூன்றாம் கலைஞரே என்று அழைக்க வேண்டாம் மாறாக சின்னவரே என்று அழைத்தால் போதும் என தெரிவித்துள்ளார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…