Sun ,Dec 10, 2023

சென்செக்ஸ் 69,825.60
303.91sensex(0.44%)
நிஃப்டி20,969.40
68.25sensex(0.33%)
USD
81.57
Exclusive

தூங்கிவிட்டேனாம் அதை பெரிய துக்கமாக சொல்கிறார்கள்...போலீஸ் எழுதிய அபோலஜி லெட்டர்!

Priyanka Hochumin October 14, 2022 & 11:30 [IST]
தூங்கிவிட்டேனாம் அதை பெரிய துக்கமாக சொல்கிறார்கள்...போலீஸ் எழுதிய அபோலஜி லெட்டர்!Representative Image.

உத்திரபிரதேசத்தில் போலீஸ் ஒருவர் அதிகம் உண்ட மயக்கத்தில் தூங்கி விட்டேன் என்று அவரின் உயர் அதிகாரிக்கு எழுதிய கடிதத்தின் புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

அக்டோபர் 10-ம் தேதி ராம் ஷெரீப் யாதவ் என்ற போலீஸ் அதிகாரி லக்னோவில் இருந்து சுல்தான்பூர் காவல் பயிற்சிப் பள்ளிக்கு (Police Training School ) வந்திருந்தார். அப்போது வகுப்பறையில் ஒரு ராணுவ வீரரைப் பற்றி சக அதிகாரிகள் விவாதம் செய்து கொண்டிருந்தனர். அவர்கள் ரொம்ப சீரியஸாக விவாதம் செய்து கொண்டிருந்த சமயத்தில் ராம் ஷரீப் யாதவ் தூங்கிவிட்டாராம். அதை பார்த்து கடுப்பான தலைமை அதிகாரி அவரை கண்டபடி திட்டி விளக்கக் கடிதம் தருமாறு உத்தரவிட்டுள்ளார்.   

அதுக்கு பாருங்க, அவர் என்ன எழுதியிருக்காருன்னா " நான் லக்னோவில் இருந்து பி.டி.சி. தாதுபூருக்கு பயிற்சிக்காக புறப்பட்டு, மிகுந்த சிரமப்பட்டு இந்த இடத்தை வந்தடைந்தேன். வரும் வழியில் சரியாக உணவு கிடைக்காத காரணத்தால் அன்று முழுக்க சாப்பிடவில்லை. அடுத்த நாள் காலையில் தான் சாப்பிட்டேன். கடுமையான பசியில் இருந்ததால் 25 ரொட்டிகள், ஒரு தட்டு சாதம், இரண்டு கிண்ணங்கள் பருப்பு மற்றும் ஒரு கிண்ணம் காய்கறிகளை சாப்பிட்டேன். அதிகம் உண்டதால் சோம்பலும் தூக்கமும் ஏற்படுத்தியது. அதனால் தான் பயிற்சியின் போது தூங்கி விட்டேன், இனிமேல் இது மாதிரியான தவறு நடக்காது என உறுதியளிக்கிறேன்" என்று சின்ன பிள்ளை தனமாக அபோலஜி லெட்டர் எழுதியுள்ளார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்