வடகொரிய அணு ஆயுத சோதனையை நடத்தலாம் என்ற உளவுத்தகவலை அடுத்து தென்கொரியா மற்றும் ஜப்பான் நாட்டு பிரதமர்களுடன் அமெரிக்கா அவசர ஆலோசனை நடத்தி வருகிறது.
தொடர் ஆயுத சோதனைகள் காரணமாக வடகொரியா மீது அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் பல்வேறு தடைகளை விதித்துள்ளன. இதன் மூலம் வடகொரிய கடும் பஞ்சத்தை எதிர்கொண்டு வருவதாகவும், அத்தியாவசிய பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்ப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இது தொடர்பாக கடந்த சில நாட்களுக்கு பின் பேசிய அமெரிக்க அதிபர் ஜோ.பைடன் ஆயுத சோதனைகளை கைவிட்டு வந்தால் மட்டுமே வடகொரியாவுடன் பேச்சு வார்த்தை நடத்தபடும் என தெரிவித்தார்.
இந்நிலையில் வடகொரியா 2017 க்குப் பிறகு முதல் முறையாக அணுகுண்டு சோதனை நடத்த தயாராகி வருவதாக நம்பந்தகுந்த உளவுத்தகவல்கள் கிடைத்துள்ளதாக தெரிவித்த அமெரிக்கா, ஆசியாவின் நட்பு நாடுகளான தென் கொரியா மற்றும் ஜப்பான் அதிகாரிகளுடன் சியோலில் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.வடகொரிய ஏழாவது அணுஆயுத சோதனைக்காக புங்கியே-ரி என்ற சோதனை தளத்தை தயார் செய்து வருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டு, வட கொரியா ஐ.நா. தடைகளை மீறி பல ஏவுகணைகளை பரிசோதித்துள்ளது, அதில் ஒன்று அதன் மிகப்பெரிய கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை என்று கருதப்படுகிறது.
இது தொடர்பாக பேசிய, தென் கொரியாவின் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள அணுசக்தி தூதுவர் கிம் கன், வட கொரியாவின் "அணு ஆயுதங்கள் தொடர்பான தகவல்களை திரட்டுவது தான் நம்மை பலப்படுத்த உதவும் என தெரிவித்தார்.
கடந்த வாரம், வட கொரியாவின் பாலிஸ்டிக் ஏவுகணை சோதனைக்கு கண்டனம் தெரிவித்து அமெரிக்கா மேலும் ஐ.நா. பொருளாதாரத் தடைகளுக்கு அழைப்பு விடுத்தது, ஆனால் சீனாவும் ரஷ்யாவும் அந்த பரிந்துரையை வீட்டோ செய்தது குறிப்பிடத்தக்கது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…