விராட் கோலி தனது தனியுரிமை ஆக்கிரமைக்கப்பட்டதாகக் கூறி, தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டு தெரிவித்துள்ளார்.
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. வீரர்கள் அங்கே உள்ள ஹோட்டல் அறையில் தங்கி வருகின்றனர். இந்த நிலையில், ஆஸ்திரேலியாவில் உள்ள ஹோட்டல் அறையில் ரசிகர் ஒருவர் விராட் கோலியின் அறைக்குள் புகுந்து வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார்.
இதனைப் பார்த்து கடுப்பான விராட் கோலி தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் ஹோட்டல் அறையின் வீடியோவைப் பதிவிட்டு, அவரது தனியுரிமை குறித்த கருத்துக்களைப் பதிவிட்டுள்ளார்.
அதன் படி இன்ஸ்டகிராமில்,“ரசிகர்கள் தங்களுக்குப் பிடித்த வீரர்களைப் பார்த்து மிகவும் மகிழ்ச்சியடைவதுடன், அவர்களைச் சந்திப்பதில் உற்சாகம் அடைகிறார்கள் என்பதை நான் புரிந்து கொள்கிறேன். இதை நான் எப்போதும் பாராட்டுவேன். ஆனால், இந்த வீடியோ என்னைத் திகைக்க வைக்கிறது. இது எனது தனியுரிமையைப் பற்றி மிகவும் சித்தப்பிரமையாக உணர வைத்தது. எனது சொந்த ஹோட்டல் அறையில் தனியுரிமை இருக்க முடியாவிட்டால், தனிப்பட்ட இடத்தை நான் எங்கே எதிர்பார்க்க முடியும்? இந்த வகையான தனியுரிமையின் முழுமையாக ஆக்கிரப்புடன் நான் சரியில்லை. தயவு செய்து மக்களின் தனியுரிமையை மதிக்கவும். அவர்களை ஒரு பண்டமாகக் கருத வேண்டாம்” என்று பதிவிட்டுள்ளார்.
கிரிக்கெட் வீரரான கோலியின் அறையில் புகுந்த நபர் செய்த காரியத்தால் கோலி வருத்தத்தில் இருப்பதாகக் கூறப்படுகிறது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…