Thu ,Apr 25, 2024

சென்செக்ஸ் 73,603.00
-249.94sensex(-0.34%)
நிஃப்டி22,325.80
-76.60sensex(-0.34%)
USD
81.57

வேளாண் செய்திகள்

விவசாயிகளுக்கு குட்நியூஸ்; ட்ரோன் மூலம் நானோ யூரியா தெளிக்கும் பணி தொடக்கம்! 

KANIMOZHI December 22, 2022

மயிலாடுதுறை அருகே அகரகீரங்குடி ஊராட்சியில் வேளாண்மை துறை சார்பில் இடுபொருட்கள் வழங்கும் நிகழ்ச்சியில் ட்ரோன் மூலம் நானோ யூரியா தெளிக்கும் செயல்முறை விளக்க பணியை மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் ராஜகுமார் தொடங்கி வைத்தார்

National Farmers Day | 4ஜி, 5ஜி என எத்தனை ஜீ வந்தாலும் நமக்கு கஞ்சி ஊத்தப்போவது விவசாயி தான்..

Nandhinipriya Ganeshan December 21, 2022

இந்தியாவின் முதுகெலும்பாக திகழ்வது விவசாயம். மற்றவர்களை போல் ஷிப்ட் முறையெல்லாம் கிடையாது. 24 மணிநேரமும் உழைக்கக் கூடியவர்கள் விவசாயிகள். எல்லோருக்கும் உணவு கிடைக்க வேண்டும் என்பதற்காக உழைக்கும் இவர்களை நினைவு கூர்வது நம் கடமை அல்லவா? அதற்காக தான் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 23 ஆம் தேதி 'தேசிய விவசாயிகள் தினம்' கொண்டாடப்பட்டு வருகிறது. குறிப்பாக, உத்தரபிரதேசம், ஹரியானா, பஞ்சாப், மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் விவசாயிகள் தினம் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அன்றாடம் உழைக்கும் விவசாயிகளை பாராட்ட இந்த நாளை தேர்ந்தெடுத்திருப்பதற்கான காரணம் ஏன்? வாங்க தெரிந்துக் கொள்வோம்.

அடக்கொடுமையே!! காசு கொடுத்து வாங்கியா?... விவசாயிகளுக்கு ஏற்பட்ட அவலம்!

Kanimozhi December 20, 2022

விளாத்திகுளம் பகுதிகளில் போதிய மழை இல்லாததால் நீரை விலைக்கு வாங்கி மிளகாய் செடிகள் நடவு செய்யும் நிலைக்கு விவசாயிகள் ஆளாகியுள்ளனர்.

கடன் முதல் மானியம் அனைத்தும் ஒரே ஆப்பில்... விவசாயிகளுக்கு அசத்தல் வாய்ப்பு!

Kanimozhi December 05, 2022

ஈரோடு மாவட்டத்தில் வேளாண் மற்றும் அதனைச் சார்ந்த தோட்டக்கலை, வேளாண் விற்பனை, வேளாண் பொறியியல் துறை போன்ற துறைகளின் மூலம் விவசாயிகளுக்கு வழங்கப்படும் முக்கிய திட்டங்களை பதிவு செய்து ஆவணப்படுத்தவும், திட்டங்கள் தொடர்பான அறிக்கைகளை பார்வையிட்டு கண்காணிக்கவும் மாவட்ட நிர்வாகத்தின் சிறப்பு முயற்சியாக நிலம் செயலி உருவாக்கப்பட்டுள்ளது.  

கால்நடை காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் 70% மானியம்… எப்படி பெறுவது?

Gowthami Subramani November 01, 2022

தேசிய கால்நடை இயக்கத் திட்டத்தின் கீழ், 2022-23 ஆம் ஆண்டிற்கான கால்நடை பராமரிப்புத் துறை மூலம் புதுக்கோட்டை மாவட்டத்தில், கால்நடைகளுக்கு மானியத்துடன் கூடிய காப்பீடு மேற்கொள்ள இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் மேற்கொள்ள 2% பரீமியத் தொகையில், மானியம் வழங்கப்படுகிறது. அதன் படி, தேசிய கால்நடை இயக்கத் திட்டத்தின் கீழ், கால்நடை வளர்ப்போருக்கு 50% முதல் 70% வரையிலான மானியம் வழங்கப்படுகிறது. அதன் படி, கால்நடை வளர்க்கும் நபர்களில் 70% மானியமும், வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ள நபர்களுக்கு 70% மானியத் தொகையும், வறுமைக் கோட்டிற்கு மேல் உள்ள நபர்களுக்கு 50% மானியத் தொகையும் வழங்கப்படும்.

முருங்கையில் கலக்கும் கரூரில் சர்வதேசமுருங்கை கண்காட்சி.. பிரேசில், துபாய், ஜப்பான், கொரியா உள்ளிட்ட பல நாடுகள் பங்கேற்பு…!

Gowthami Subramani October 31, 2022

கரூரில் மாபெரும் முருங்கைக் கண்காட்சி சர்வதேச அளவில் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது. தற்போது முருங்கைக்காய் என்றாலே, கரூர் மாவட்டம் தான் பெரும்பாலும் அனைவருக்கும் நினைவில் வரும். ஏனெனில், கரூர் மாவட்டத்தில் தான் முருங்கைக்காய் மிகவும் மலிவாக கிடைக்கக் கூடியதாக அமைகிறது. இத்துடன், முருங்கைக்குப் பெயர் போன கரூரில், முருங்கையை வைத்து அழகு சாதனப் பொருள்கள் தயாரிக்கவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது கரூரின் பெருமையை பறைசாற்றும் விதமாக அமைகிறது. இந்நிலையில், முருங்கைக்கு சிறந்த இடமாகவே கருதப்படும் கரூரில் உள்ள தனியார் ஓட்டலில் உள்ள அரங்கில் இந்திய தொழில் முனைவோர் கூட்டமைப்பு சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது

ஒரு எருமை மாட்டின் விலை ரூ.35 கோடி.. பால், பிஸ்தா, பாதாம் தான் சாப்பாடு… ஒரு துளி விந்து 1500 ரூபாயாம்…

Gowthami Subramani October 27, 2022

ஒரு எருமை மாட்டின் விலை 35 கோடியா? அது எப்படி சாத்தியம்? என எல்லோருக்கும் மனதில் சந்தேகம் எழும். ஆனால், இது முற்றிலும் உண்மை. ஐதராபாத்தில் நடைபெற்ற சதர் விழாவில் ரூ.35 கோடி மதிப்புள்ள எருமை பங்கேற்றது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தது. எத்தனையோ கண்காட்சிகள் ஆண்டுதோறும் பல்வேறு இடங்களில் நடைபெற்று வருகிறது. அது போலவே, எருமைகள் பங்கேற்கக் கூடிய விழா ஒன்று தெலுங்கானா மாநிலத்தில் ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம். அதாவது, இந்த விழா தெலுங்கானா மாநிலத்தின் ஹைதராபாத்தில் நடைபெறுவது வழக்கம் ஆகும். இந்த விழாவில், விலையுயர்ந்த எருமைகள் பங்கேற்கும். அதன் படி, இந்த ஆண்டில் ஹைதராபாத்தைச் சேர்ந்த மது யாதவ் என்பவரது தலைமையில், நகராட்சி மைதானத்தில் உழவர் காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

குஷியில் விவசாயிகள்… மத்திய அரசு வெளியிட்ட பிஎம் கிசான் தொகை… உங்க அக்கவுண்டுக்கு வந்துருச்சானு பாருங்க…

Gowthami Subramani October 17, 2022

பிஎம் கிசான் திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கு 12 ஆவது தவணைத் தொகை இன்று அதாவது அக்டோபர் 17 ஆம் நாள் வங்கிக் கணக்கில் செலுத்த உள்ளதாக மத்திய அரசு தெரிவித்தது. அதன் படி, இன்று பிரதமர் நரேந்திர மோடி அவர்களால், 12 கோடி விவசாயிகளுக்கு பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் 12 ஆவது தவணைத் தொகை செலுத்தப்பட்டுள்ளது. பொருளாதாரத்தில் நலிவடைந்த விவசாயிகளுக்கு உதவும் வகையில், மத்திய அரசு ஆண்டுக்கு 6000 ரூ தவணை முறையில் நான்கு மாதங்களுக்கு ஒரு முறை வழங்குகிறது. அதன் படி, நான்கு மாதங்களுக்கு ஒரு முறை மூன்று தவணைகளாக ரூ.2000 பெறுவர். இது அவர்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும்.

விவசாயிகளுக்கு வழங்கும் தீபாவளி பரிசு.. மத்திய அரசின் சூப்பர் அறிவிப்பு.. விவசாயிகள் மகிழ்ச்சி…!

Gowthami Subramani October 13, 2022

விவசாயிகளுக்கு பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் தவணைத் தொகை குறித்த விவரங்களை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. பிஎம் கிசான் திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கு உதவித் தொகை வழங்கப்படுகிறது. அதன் படி, வருடந்தோறும் ரூ.6,000 வீதம் தவணைத் தொகையாக நான்கு மாதங்களுக்கு ஒரு முறை ரூ.2,000 வழங்கப்படுகிறது. அதன் படி, இந்த பிஎம் கிசான் திட்டத்தில் விவசாயிகளுக்கு 12 ஆவது தவணைத் தொகை வழங்கப்பட உள்ளது. இதில், 12 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் இந்த தொகை செலுத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசின் அசத்தல் அறிவிப்பு… 1 லட்சம் பரிசுத் தொகை வெல்ல ஓர் அரிய வாய்ப்பு… யாருக்கு தெரியுமா..?

Gowthami Subramani October 11, 2022

நமது மாநில மரமாக விளங்கும் பனை மரத்தின் சாகுபடியை ஊக்குவிக்க தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பனை மரம் ஏறும் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களின் கஷ்டத்தைப் போக்குவதற்குத் திட்டமிட்டுள்ளது. அதாவது, இந்த திட்டத்தின் சிறப்பம்சமாக எந்த வித ஆபத்தும் இல்லாமல், எளிதாக பனை மரத்தினை ஏறுவதற்கு ஒரு சிறந்த கருவியை கண்டுபிடிப்போருக்கு ரூ.1 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்படும் என தெரிவித்துள்ளது. மேலும், தமிழக அரசு சார்பில் மானியம் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.