Fri ,Apr 19, 2024

சென்செக்ஸ் 72,953.43
464.44sensex(0.64%)
நிஃப்டி22,132.90
137.05sensex(0.62%)
USD
81.57

ஈரோடு

விரைவில் நடைபெற உள்ள மாரத்தான்… எங்கு.. எப்போது..? கலந்து கொள்ளும் அனைவருக்கும் இலவசம்.. என்னென்ன தெரியுமா..?

Gowthami Subramani November 27, 2022

ஈரோடு மாவட்டம் பவானியில், திமுக மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, மாரத்தான் போட்டி நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்ள நினைப்பவர்கள், கட்டாயம் பதிவு செய்ய வேண்டும். ஆண்கள், பெண்களுக்கான பரிசுத் தகவல்கள், வயது வரம்பு உள்ளிட்ட அனைத்துத் தகவல்களைப் பற்றி காணலாம். இன்றைய தினம் திமுக மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த தினம் ஆகும். இதனையொட்டி திமுகவினர் பெரும்பாலான பகுதிகளில் நலத்திட்ட உதவிகள் செய்து வருகின்றனர்.

அடிக்கடி பாம்பு கனவில் வருது.. பூசாரியை நம்பி செய்த பரிகார பூஜை.. நாக்கையே இழந்த விவசாயி.. 

Nandhinipriya Ganeshan November 26, 2022

இந்த காலத்திலும் கூட மூடநம்பிக்கைகளை பின்பற்றியும், நம்பியும் பல வினோத சம்பவங்கள் ஆங்காங்கே நடந்து கொண்டுதான் இருக்கின்றன. மூடநம்பிக்கைக்கு எதிராக எத்தனையோ வீடியோக்கள் சினிமாவிலும், சமூக வலைத்தளங்களிலும் வந்துக்கொண்டிருந்தாலும் அதை காதில்கூட போட்டுக்கொள்ளாமல் ஒருசிலர் ஏமாந்து விடுகின்றனர். சில சமயங்களில் அது விபரீதத்திலும் முடிந்துவிடுகிறது. அந்தமாதிரி ஒரு சம்பவம் தான் ஈரோட்டில் அரங்கேறியுள்ளது. திருப்பூர் மாவட்டம் முத்தூரை சேர்ந்த 54 வயதான விவசாயி ஒருவரின் கனவில் அடிக்கடி பாம்பு வந்துள்ளது. அய்யோ.. அடிக்கடி இப்படி கனவு வருதே என்று பயந்து போன அவர், தன் மனைவியிடம் கூறியிருக்கிறார். இதையடுத்து, இருவரும் அப்பகுதியில் உள்ள ஜோசியர் ஒருவரை அணுகியுள்ளனர். அந்த ஜோசியரும், ஈரோடு மாவட்டத்தில்  உள்ள ஒரு கோவில் சாமியாரிடம் பரிகார பூஜை செய்தால் எல்லாம் சரியாகிவிடும் என்று கூறியுள்ளார். இதனை உண்மை என நம்பிய அந்த விவசாயி, ஜோதிடர் கூறிய கோவிலுக்கு சென்று அங்கிருந்த பூசாரியை சந்தித்து நடந்தவற்றை கூறியிருக்கிறார். அந்த பூசாரியும், அவரை உள்ளே அழைத்து சென்று அங்குள்ள 20-க்கும் மேற்பட்ட பாம்புகளை காட்டியுள்ளார்.

64 பைரவர்களும் ஒரே இடத்தில்.. ஆசியாவிலேயே பெரிய பைரவர் கோவில் நம்ம ஈரோட்டில்.. 

Nandhinipriya Ganeshan November 22, 2022

ஈரோடு மாவட்டம் அறச்சலூர் அருகே உள்ள ராட்டை சுற்றிபாளையத்தில் பிரம்மாண்டமான பைரவர் கோவில் கட்டுமான பணிகள் சுமார் 7 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. தற்போது, திருப்பணிகள் முடிவடையும் நிலையில் உள்ள இந்த கோவிலில் உலகில் எங்கும் இல்லாதவாறு 64 பைரவர்களும் ஒரே இடத்தில் இருப்பதோடு மட்டுமல்லாமல், 3 அடி உயர காலபைரவர் சிலையும் பிரம்மாண்டமாக நிறுவப்பட்டு உள்ளது. இந்த சிலை யுனிக்யூ புக் ஆப் வேர்ல்ட் ரெக்கார்ட் எனும் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. இந்த நிலையில், கோவிலின் மகா கும்பாபிஷேக விழா வருகின்ற 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 13 ஆம் தேதி திங்கட்கிழமை காலை 10.15 மணிக்கு நடைபெற உள்ளதாக ஸ்வர்ண பைரவ பீடம் அறக்கட்டளை நிர்வாகி விஜயசாமிகள் தெரிவித்துள்ளார். 

பேருந்து சக்கரத்தில் சிக்கி மாணவன் பலி... ஈரோடு அருகே சோகம்... 

Nandhinipriya Ganeshan November 14, 2022

ஈரோடு மாவட்டம் பவானி அருகே குதிரைக்கல்மேடு பகுதியை சேர்ந்தவர் மாதையன். இவருடைய மகன் திவாகர். இவர் அம்மாப்பேட்டையில் உள்ள தனியார் பள்ளியில் 8 ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்தநிலையில், திவாகர் இன்று வழக்கம் போல் பள்ளி பேருந்தில் சென்றுள்ளார். அப்போது திவாகர் படிக்கட்டில் நின்றபடி பயணித்துள்ளார். இதற்கிடையில், டிரைவர் பிரேக் அடித்ததால் நிலைத்தடுமாறி படியில் இருந்து கீழே விழுந்த மாணவன் மீது சக்கரம் ஏறி இறங்கியுள்ளது. சம்பவ இடத்திலேயே மாணவன் தலை நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தான். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 

கொடிவேரி அணையில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை.. 

Nandhinipriya Ganeshan November 12, 2022

ஈரோடு: கடத்தூர் கோபி அருகே உள்ள கொடிவேரியில் பவானி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்பட்டுள்ளது. இங்கு, ஈரோடு மட்டுமின்றி கரூர், திருப்பூர், கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வந்து குளித்து மகிழ்வார்கள். ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில் வழக்கத்தைவிட சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதும். இந்த நிலையில், அதிக அளவு உபரி நீர் வெளியேறுவதால் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல், கொடிவேரி அணை பகுதியில் பரிசல் இயக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. 

மேலெழுந்த புதைக்கப்பட்ட சடலம்...வெளிவந்த திடுக்கிடும் உண்மைகள்...பீதியில் மக்கள்!

Priyanka Hochumin October 26, 2022

பாசூர் காவிரி ஆற்று தடுப்பணை அருகே கை, கால் கட்டப்பட்ட ஆண் சடலம் அழுகிய நிலையில் துர்நாற்றத்துடன் கிடந்துள்ளது. அதனை பார்த்த அப்பகுதி மக்கள் பயந்து, காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். பின்னர் அங்கு வந்த போலீசார் விசாரித்த போது, " ஒரு மாதத்திற்கு முன்பு பாசூர் அருகேயுள்ள செங்கோடம் பாளையத்தைச் சேர்ந்த துரைசாமி என்ற 70 வயது முதியவர் உயிரிழந்த நிலையில், உறவினர்கள் அவருக்கு முறையாக கை கட்டு, கால் கட்டு, வாய்க்கட்டு, காலில் மஞ்சள் கயிறு கட்டி முறையாக அடக்கம் செய்துள்ளனர்".

அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை.. அதிரடி அறிவிப்பு!!

Sekar October 17, 2022

கனமழை காரணமாக ஈரோடு மாவட்டம் அந்தியூரில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணன் உன்னி உத்தரவிட்டுள்ளார். ஈரோடு மாவட்டம் அந்தியூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த மூன்று நாட்களாகவே தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளில் வெள்ளம் சூழ்ந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு முதல் விடிய, விடிய மழை வெளுத்து வாங்கி வருகிறது. குறிப்பாக அந்தியூர் பகுதியில் மட்டும் கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கனமழை பெய்திருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பர்கூர் மலைப் பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக வரட்டுப்பள்ளம் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. 

தூங்கும் போது தாயைக் கொன்ற 14 வயது சிறுவன்... வெளியான பகீர் தகவல்...

Gowthami Subramani October 13, 2022

சத்தியமங்கலம் அருகே ஒன்பதாம் வகுப்பு படிக்கும் சிறுவன் ஒருவன், தூங்கும் போது கல்லைத் தூக்கிப் போட்டு தாயைக் கொன்ற சம்பவம் அந்தப் பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் யுவராணி. இவரது மகன் 9 ஆம் வகுப்பு படித்து வருகிறான். சிறுவனின் வயது 14. இந்த சிறுவன் சரியாக படிக்காததால், விடுதியில் சேர்க்க பெற்றோர் திட்டமிட்டனர். இதனைத் தெரிந்து கொண்ட மாணவன், தான் விடுதிக்கு செல்ல விருப்பமில்லை என தாய் யுவராணியிடம் கூறியுள்ளார். ஆனால், நீ விடுதியில் தங்கியிருந்தால் தான் சரியாகப் படிப்பாய் என யுவராணி கூறியுள்ளார்.

கோர விபத்து.. இறந்த உறவினரின் துக்கம் விசாரிக்க சென்றபோது பரிதாபம்..

Nandhinipriya Ganeshan October 13, 2022

தஞ்சை பில்லிகார் வீதியை சேர்ந்தவர் அனிதா (வயது 30). ஆசிரியை படிப்பு முடித்து உள்ள இவர், ரயில்வே துறை தேர்வு எழுதி வெற்றி பெற்று, கடந்த 8 மாதங்களுக்கு முன்பு தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அரூர் ரயில்நிலையத்தில் ஊழியராக பணியில் சேர்ந்தார். இந்தநிலையில் அனிதாவின் பெரியம்மா மகன் பிரசாந்த் என்பவர் நேற்று முன்தினம் திடீரென மரணம் அடைந்தார். இதற்கு துக்கம் விசாரிப்பதற்காக அனிதா, அவருடைய தாய், தந்தையுடன் திண்டல் வந்துள்ளனர். துக்க நிகழ்வில் கலந்துக்கொண்ட அனிதா அவருக்கு தெரிந்த தோழி ஒருவரை பார்த்துவிட்டு வருவதற்காக உறவினர்களான ரியாஸ் (11), தனுஷ் (19) ஆகியோருடன் நேற்று ஒரு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். சுமார் 2 மணியளவில் ஈரோடு பெருந்துறை ரோட்டில் திண்டல் நோக்கி சென்றுக்கொண்டிருந்தனர். 

11 ம் வகுப்பு மாணவன் கோவில் பூசாரியா? சத்தியமங்கலம் அருகே வினோத திருவிழா..

Nandhinipriya Ganeshan October 10, 2022

சத்தியமங்கலத்தையடுத்த அரியப்பம்பாளையம் அருகே புதுகொத்துக்காடு கிராமத்தில் பிரசித்தி பெற்ற வீரமாத்தி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு 8 வருடத்திற்கு ஒருமுறை பூசாரி தேர்ந்தெடுக்கும் வினோத திருவிழா நடைபெறுவது வழக்கம். அந்தவகையில் தற்போதுள்ள பூசாரி தேர்ந்தெடுக்கப்பட்டு 8 ஆண்டுகள் முடிவந்ததையடுத்து, புது பூசாரியை தேர்ந்தெடுப்பதற்காக அந்த பகுதி மக்கள் முடிவு செய்தனர்.