Fri ,Apr 19, 2024

சென்செக்ஸ் 72,086.15
-402.84sensex(-0.56%)
நிஃப்டி21,868.60
-127.25sensex(-0.58%)
USD
81.57

திரைவிமர்சனம்

The Fabelmans | தி ஃபேபல்மேன்ஸ் எப்படி இருக்கு? பாக்கலாமா?

UDHAYA KUMAR January 11, 2023

சின்ன வயதிலிருந்தே சினிமா மீது மோகம் கொண்டு அதில் கைதேர்ந்த கலைஞனாக ஆகிவிட வேண்டும் என ஆசைப் படும் கதாநாயகன். அதற்காக என்ன என்ன செய்கிறார் என்பதுதான் கதை. படத்தின் கதைக்களம் 1952ல் ஆரம்பிக்கிறது. கதாநாயகன் பெயர் சாமி ஃபேபல்மேன். சிறு வயதில் இவரை இவரது பெற்றோர் சினிமாவுக்கு அழைத்துச் செல்கிறார்கள். அதுதான் அவர் தன் வாழ்க்கையில் பார்க்கின்ற முதல் படம். படத்தின் முக்கியமான காட்சியில் அதிவேகமாக வரும் ரயில் அங்கு ரயில்வே கிராஸிங்கில் மாட்டிக் கொண்ட காரை அடித்து தூக்கி எறிவது போன்ற ஸ்டண்ட் சீக்குவன்ஸை பார்த்து மிகவும் பரவசமடைகிறார். இந்த சீன் எப்படி உருவாக்கியிருப்பாங்க என யோசிக்க ஆரம்பித்து சினிமா மீது காதலை வளர்த்துக் கொள்கிறார். முதல் முறை படத்துக்கு சென்றவரை அப்பாவும் அம்மாவும் படம் எப்படி இருக்கு? இந்த ஃபீல் எப்படி இருக்கு என கேட்கிறார்கள். அதற்கு அவரிடம் பதில் இல்லை வாயடைத்துப் போய்விட்டார் கதாநாயகன். ஆனால் வீடு போய் சேர்ந்ததும் தனக்கு பொம்மை காரும் டிரெய்னும் வேணும் என அடம்பிடிக்கிறார். அந்த காட்சியை தான் மீண்டும் உருவாக்கப்போவதாக கூறுகிறார். அப்பாவுடைய கேமரா ஒன்றில் இதை படம்பிடிக்க திட்டமிடுகின்றனர். இப்படியாக சினிமாவை கற்றுக் கொள்ள முயற்சிக்கிறார் ஹீரோ. அப்பாவுக்கு நியூஜெர்ஸியிலிருந்து அரிசோனாவுக்கு பணி இட மாறுதல் கிடைக்கிறது. இதனிடையே கதையிலும் மாற்றம் நிகழ்கிறது. சிறுவனான ஹீரோ இளைஞனாக மாறுகிறார். கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்தி ஷார்ட் பிலிம்ஸ் எடுக்கிறார். தன் சினிமா கனவை நினைவாக்க மீண்டும் மீண்டும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். இப்படி மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றி தேடித் தந்ததா? அவர் சினிமா உலகில் நல்ல பெயரை எடுத்தாரா? தான் கொண்ட லட்சியக் கனவை ஜெயித்தாரா என்பதுதான் படத்தின் கதை.

துணிவு எப்படி இருக்கு?

UDHAYA KUMAR January 12, 2023

ஹெச் வினோத் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள துணிவு திரைப்படம் வெளியானது. அதிகாலை 1 மணிக்கே படத்தை திரையிட்டுள்ள நிலையிலும் ரசிகர்கள் கூட்டம் கூட்டமாக குவிந்து உற்சாகம் மிகுந்து காணப்படுகின்றனர்.  மிகப் பெரிய வெற்றியை எதிர்நோக்கி காத்திருக்கும் அஜித்குமார், நேரடியாக விஜய்யுடன் மோத தயாரான படம் துணிவு. கண்டென்ட் மீதுள்ள நம்பிக்கையால் நேருக்கு நேர் மோதி ஜெயிக்க முடியும் என்கிற நம்பிக்கை இருப்பதனால்தான் இந்த படத்தை ஒரேநாளில் ரிலீஸ் செய்ய சம்மதித்திருக்கிறார்.  நிச்சயம் வாரிசு படத்தை விட துணிவு கதை சிறப்பாக இருக்கும் என்று கூறப்படுகிறது. படத்தை பார்த்துக் கொண்டிருப்பவர்கள் ஆரம்பம் முதலே டிவிட்டரில் டிவீட் செய்து இதனை அறிவித்து வருகின்றனர்.  அஜித்குமாரின் அறிமுக காட்சியில் விசில் சத்தம் காதைப் பிளக்க ஒரு சில நிமிடங்களுக்கு காதில் எந்த வசனமும் விழாமலே இருக்கிறது.  ரசிகர்களுக்கான படம் முதல் பாதி என இயக்குநர் ஹெச் வினோத் சொன்ன மாதிரியேதான் துவங்கியிருக்கிறது. படம் துவங்கி சில நிமிடங்களிலேயே அமர்க்களமான காட்சிகளால் ரசிகர்கள் உற்சாகத்திலேயே மிதந்து வருகின்றனர். 

வாரிசு எப்படி இருக்கு?

UDHAYA KUMAR January 12, 2023

தில் ராஜூ தயாரிப்பில் வம்சி படிப்பள்ளி இயக்கியுள்ள படம் வாரிசு. தளபதி விஜய் கதாநாயகனாக நடித்திருக்கும் இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருக்கிறார். இவர்களுடன் குஷ்பு, சரத்குமார், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். படம் அறிவிக்கப்பட்ட போது பெரிய அளவில் எதிர்பார்ப்பு இல்லாமலேயே இருந்தது. ஆனால் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் மூலம் கொஞ்சம் ரசிகர்களை கவர்ந்தனர். ஆனாலும் படம் பெரிய அளவில் பிரபலம் ஆகவில்லை. வழக்கமான விஜய் படங்கள் போல இருக்காது என்றே பலரும் நினைத்தனர். இதனால் தளபதி 67 படத்தை பார்த்துக் கொள்ளலாம் என முடிவுக்கு வந்தனர். ஆனால், ரஞ்சிதமே பாடல் வெளியாகி பட்டித் தொட்டியெல்லாம் பிரபலமாகி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பாடும் பாட்டாக ஹிட்டானது. இதனைத் தொடர்ந்து அடுத்தடுத்து தீ தளபதி, சோல் ஆஃப் வாரிசு என பாடல்கள் வெளியாகி பட்டையைக் கிளப்பியது. பின் இசை வெளியீட்டு விழாவில் அத்தனை பாடல்களும் வெளியானது. இதன்மூலம் ரசிகர்களுக்கு படத்தின் மீதான ஈர்ப்பு அதிகரித்தது. இந்நிலையில் படம் ஜனவரி 11ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. அன்றிலிருந்து தொடர்ந்து விளம்பரங்கள் மூலம் ரசிகர்களின் மனதை தொட பல்வேறு வகையான வித்தைகளை கையாண்டது படக்குழு. ரயில், பேருந்து, விமானம் என விளம்பரங்கள் பட்டையைக் கிளப்பியது. இப்படியான பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று அதிகாலை 4 மணிக்கு வாரிசு திரைப்படம் வெளியாகி இருக்கிறது. படத்தை பார்த்தவர்கள் படம் வேறு லெவலில் இருப்பதாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.

ராஜாவின் பார்வையிலே படம் எப்படி இருக்கு?

UDHAYA KUMAR January 06, 2023

அஜித், விஜய் சேர்ந்து நடித்த ஒரே படமான ராஜாவின் பார்வையிலே படம் இன்று மீண்டும் வெளியாகியுள்ளது. இந்நிலையில், இந்த படம் குறித்து ஒரு சிறு பார்வை. கதை ராஜா ஒரு ஏழை குடும்பத்து இளைஞன். நன்கு படித்தால் கஷ்டங்கள் நீங்கிவிடும் நல்ல வேலை கிடைத்தால் சம்பாத்யம் உயர்ந்து குடும்ப கஷ்டம் குறையும் என அதை நோக்கியே ஓடும் ஒரு குடும்பம். கௌரி எனும் பணக்கார குடும்பத்து இளம்பெண் ராஜாவைப் பார்த்து காதலில் விழுகிறாள். அவனை எப்படியாவது அடைய வேண்டும் என உறுதியாக இருக்கிறாள். ஆனால் ராஜாவோ அவளைக் கண்டு ஓடுகிறான். விலகி நிற்கிறான். எதனால் இப்படி செய்கிறான் ராஜாவுக்கு ஏன் தன்னை பிடிக்கவில்லை என்பது தனக்கு நிச்சயம் தெரிய வேண்டும் என நினைக்கிறாள் கௌரி. ராஜா தன்னுடைய நண்பன் சந்துருவின் கதையைக் கூறுகிறான். அவன் சாந்தி எனும் ஒரு பெண்ணை காதலித்திருக்கிறான். ஆனால் இந்த காதல் சக்ஸஸ் ஆகவில்லை. இதனால் மனமுடைந்த சந்துரு மரணத்தைத் தேடிக் கொண்டான். அதிலிருந்து இவன் காதலை வெறுக்கிறான். காதல் என்றாலே மரணத்தில் முடியும் என நினைக்கிறான். அதன்பிறகு ஒரு கட்டத்தில் ராஜாவுக்கு கௌரியை பிடித்துப் போக அவர்கள் காதலிக்கிறார்கள். இந்த விசயம் கிராமத்துக்கு தெரிய அவர்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். இதனை எதிர் கொண்டு ராஜா - கௌரி இருவரும் சேர்ந்தார்களா இல்லையா என்பதே கதை. ராஜா கதாபாத்திரத்தில் விஜய்யும், சந்துரு கதாபாத்திரத்தில் அஜித்தும் நடித்திருப்பார்கள். இந்திரஜா கௌரி கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். அஜித் காதலிக்கும் பெண்ணாக காயத்ரி நடித்திருப்பார். இவர் ரோஜா சீரியலில் வரும் மருமகள் கேரக்டர். வடிவேலு, கனகராஜ், வடிவுகரசி, சத்யப்பிரியா, சாருஹாசன், குமரிமுத்து உள்ளிட்ட இன்னும் பலர் நடித்திருந்த இந்த படம் கடந்த 1995ம் ஆண்டு வெளியானது.

The Elephant Whisperers Review ஆஸ்கருக்கு சென்ற தமிழ்ப்படம் வென்று சாதிக்குமா?

UDHAYA KUMAR January 03, 2023

முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாமுக்கு கொண்டு வரப்படும் தாயை இழந்த ரகு, அம்மு என்ற இரு யானைக்குட்டிகளை பாசத்தை காட்டி வளர்த்து வருகிறார்கள் பொம்மன் - பெல்லி இருவரும். யானைக்குட்டிகள் ஏன் ஆதரவற்ற நிலையில் இதுபோன்ற முகாம்களுக்கு கொண்டு வரப்படுகின்றன. வயதான பொம்மன்- பெல்லி தம்பதிக்கு இடையிலான காதல், யானைகள் மீது அவர்கள் காட்டும் பாசம். கடைசியில் என்ன ஆகின்றது என்பதை அழகாய் காட்சிப்படுத்தியுள்ளனர். காட்டில் அணில் சாப்பிடுவது, ஆந்தை எட்டி பார்க்கும் , ஓணான் படுத்திருக்கும் காட்சி என படத்தின் ஆரம்பத்திலேயே நம்மை கவரும் வகையில் ஒளிப்பதிவு செய்திருப்பது நம்மை மேற்கொண்டு படத்தை காண ஆர்வத்தை தூண்டுகிறது. காட்டை மிக அழகான காட்சிகளுடன் சுற்றிக் காட்டுகிறார்கள். யானை ரகுவின் செல்ல சேட்டைகளையும் படமாக்கித் தந்திருக்கிறார்கள். குடிசையிலிருந்து வந்து குளிக்கும் காட்சி, புல் சாப்பிடும் காட்சி என அனைத்தும் நமக்கு அருகிலிருந்து பார்க்கும் உணர்வைத் தருகிறது. இன்னும் பல சுவாரஸ்யமான காட்சிகளும் படத்தில் இருக்கின்றன. அனைத்தையும் கூறிவிட்டால் நீங்களே கற்பனை செய்துகொண்டு அதனை பார்க்கும் அனுபவத்தை இழந்துவிடுவீர்கள். படத்தை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். இந்த திரைப்படம் இப்போது ஆஸ்கர் ரேஸில் இருக்கிறது.

டிரைவர் ஜமுனா படம் எப்படி இருக்கு? திரைவிமர்சனம்!

UDHAYA KUMAR December 29, 2022

ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் இயக்குநர் Kinslin இயக்கி இன்று  Dec 30, 2022 தேதி வெளிவந்த   டிரைவர் ஜமுனா படம் எப்படி இருக்கு?   S P Chowthari  நிறுவனம் சார்பில்  தொடங்கப்பட்ட இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் கதாநாயகியாக நடித்திருக்கிறார்.  கதைச் சுருக்கம்  விரைவில் அப்டேட் செய்யப்படும்

ராங்கி படம் எப்படி இருக்கு? திரைவிமர்சனம்!

UDHAYA KUMAR December 30, 2022

திரிஷா நடிப்பில் இயக்குநர் எம்.சரவணன் இயக்கி இன்று  Dec 30, 2022 தேதி வெளிவந்த   ராங்கி படம் எப்படி இருக்கு?  Lyca Productions நிறுவனம் சார்பில்  தொடங்கப்பட்ட இந்த படத்தில் Trisha கதாநாயகியாக நடித்திருக்கிறார். 

செம்பி படம் எப்படி இருக்கு? திரைவிமர்சனம்! | sembi movie review

UDHAYA KUMAR December 30, 2022

பிரபு சாலமன் இயக்கத்தில் இன்று வெளியாகியுள்ள திரைப்படம் செம்பி. இதில் கோவை சரளா, அஸ்வின்குமார், தம்பி ராமையா உள்பட பலர் நடித்திருக்கிறார்கள். ஆர் ரவீந்திரன், அஜ்மல் கான், ரியா ஆகியோர் தயாரித்திருக்கிறார்கள். கதைச் சுருக்கம் விரைவில் அப்டேட் செய்யப்படும் விமர்சனம் விரைவில் அப்டேட் செய்யப்படும்

லத்தி படம் எப்படி இருக்கு? | Laththi movie review in tamil

UDHAYA KUMAR December 24, 2022

இரும்புத் திரை படத்துக்குப் பிறகு வெற்றிக்காக போராடி வரும் விஷாலுக்கு லத்தி படம் வெற்றிப்படமாக அமையுமா என்பது இப்போது சந்தேகமாகியுள்ளது. படத்துக்காக கடினமான உழைப்பைப் போட்டாலும் கதை சரியில்லை என்பதால் படம் சராசரி வெற்றி பெறுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். அ. வினோத் குமார் எனும் அறிமுக இயக்குநருக்கு வாய்ப்பு கொடுத்துள்ளார் விஷால். இந்த படத்தில் விஷால் ஜோடியாக சுனைனா நடித்துள்ளார். இவர்களுடன் முக்கிய கதாபாத்திரத்தில் பிரபு நடித்திருக்கிறார். சமர் படத்துக்குப் பிறகு விஷாலுடன் இரண்டாவது முறையாக இணைந்திருக்கிறார் சுனைனா. தலைவாசல் விஜய், முனீஸ்காந்த், வினோதினி, ரமணா, வெங்கடேஷ் ஆகியோர் தங்களுக்கு கொடுக்கப்பட்ட வேலைகளைச் செய்துவிட்டு நகர்கின்றனர். விஷாலின் நண்பர்களான நந்தா, ரமணா இணைந்து தயாரித்துள்ள இந்த படத்திலிருந்து பெரிய லாபம் எதையும் எடுக்க வாய்ப்பில்லை என்கிறார்கள் மற்ற விமர்சகர்கள். யுவன் சங்கர் ராஜா இசையில் பாடல்கள் பெரிய அளவில் ஈர்ப்பை ஏற்படுத்தவில்லை. சண்டைக் காட்சிகளில் முன்னெப்போதோ கேட்ட இசைதான் பின்னணியில் ஒலிக்கிறது. ஒருமுறை பார்க்கலாம்

கணெக்ட் படம் எப்படி இருக்கு? | Connect movie review in Tamil

UDHAYA KUMAR December 24, 2022

மாயா, கேம் ஓவர் படங்களை இயக்கிய அஸ்வின் சரவணன் இயக்கத்தில் விரைவில் வெளிவரவுள்ள திரைப்படம் கணெக்ட்.  லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் அட்டகாசமான நடிப்பில் வருகிற 22ஆம் தேதி வெளியாகவுள்ளது இந்த திரைப்படம் நயன்தாராவுடன் இப்படத்தில் சத்யராஜ், வினய், அனுபம் கெர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.